உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: தலைவர்களின் கருத்து என்ன?

நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: தலைவர்களின் கருத்து என்ன?

சென்னை: நாட்டில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், அதிமுக பொதுச்செயலர் இ.பி.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாசமூக நீதியில் உறுதிபூண்டுள்ள மத்திய அரசு, இன்று வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், சமூக சமத்துவம் மற்றும் ஒவ்வொரு பிரிவின் உரிமைகளுக்கும் வலுவான அர்ப்பணிப்புக்கான செய்தி வழங்கப்பட்டுள்ளது.பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்ஜாதி வாரிகணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த கணக்கெடுப்பு மூலம், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும், இதன் மூலம் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த முடியும்.அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்தமிழக மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அ.தி.மு.க., ஆட்சியின் போது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.ராமதாஸ் வரவேற்புஇந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.தேசிய அளவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இன்றைய பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் நேரில் வலியுறுத்தினேன். மூன்று முறை கடிதம் எழுதினேன். லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் அன்புமணி பலமுறை வலியுறுத்தியிருந்தார்.பா.ம.க.வின் முயற்சியால் கடந்த மூன்று முறை னாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமாகி கடைசி நேரத்தில் கை நழுவிய நிலையில், இப்போது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும். இதற்கு பிரதமர் மோடிக்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறயுள்ளார்.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைலோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் தொடர் அழுத்தத்தின் விளைவாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, ராகுலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சண்முகம்ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள்தான் நடத்த வேண்டும் என்று கூறி நியாயமான கோரிக்கையை நிராகரித்து வந்த மத்திய அரசு, இன்று நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் தொடர் வற்புறுத்தலுக்குக் கிடைத்த வெற்றி இது.அமமுக பொதுச் செயலர் தினகரன்ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி , மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங், மத்திய அமைச்சர் சுகந்த மஜூம்தார், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் வாசன், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

கொண்டாட்டம்

பீஹார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான தேஜஸ்வி, மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து தொண்டர்களுக்கு லட்டு கொடுத்து கொண்டாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

spr
ஏப் 30, 2025 23:29

இன்றைய நிலையில் பொருளாதார அடிப்படையில் மக்கள் நிலை என்னவென்று அறிந்து பொருளாதாராத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு ஜாதி மதம் இனம் என்றெல்லாம் பாராமல் உதவுவதுதான் இந்தியா முன்னேற உதவும்.ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மக்களை பிரிக்கும் சலுகைகளை பெற உதவும் என்பதால் மக்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட ஜாதி என்றே குறிப்பிட்டூச் சலுகைகளை விடாமல் அனுபவிப்பார்கள்.


mohanamurugan
ஏப் 30, 2025 22:22

சனாதன தர்மத்திற்கு விரோதமான பதிவு


Yes God
ஏப் 30, 2025 21:47

எதையும் சரியாக ஆராய்ந்து பார்க்காமல் செய்வது சிக்கல் வரும்.


Yes God
ஏப் 30, 2025 21:43

18 வயதுக்கு மேற்பட்ட வயதினர் ஜாதிச்சான்றுகள் படி ஜாதிகளை பிரித்து இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு சரி பாரக்கலாம். அதில் சில உயர் ஜாதிகளிடம் ஜாதி சான்று இருக்காது.. அவர்களுக்கு ஆதார் அட்டைகளை கணக்கிடலாம்.


Yes God
ஏப் 30, 2025 21:33

அகில இந்திய ஜாதி வாரி கணக்குடன் மொத்த மாநில வாக்காளர் பட்டியல் ஒத்துள்ளதா என்பதையும் கிராஸ் செக் பண்ணவேண்டும்.


Ramesh Sargam
ஏப் 30, 2025 21:07

திமுகவுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று ஒருவர் தற்பெருமைபேசி திரிகிறார்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 30, 2025 20:45

சாதி ஒழிச்சிட்டேன்னு ஒரு தாடியும் டோப்பவும் சொல்லுச்சு, என்ன ஆச்சி


m.arunachalam
ஏப் 30, 2025 20:27

Simply bad .


தமிழ்வேள்
ஏப் 30, 2025 19:45

ஒருவன் ஒரு குறிப்பிட்ட சாதியில் உள்ளவன் என்பதற்கான அனுஷ்டான ஆதாரம் சர்.எட்கர் தர்ஸ்டனால் சுமார் ஆறு வால்யூம்களில் தொகுக்கப்பட்டது தான் இன்று வரை கோர்ட் கேஸ் குறுக்கே ஆதார் ஆவணம். அது இன்று வரை புதுப்பிப்பு திருத்தம் செய்யப்படவில்லை...ஒரு குறிப்பிட்ட சாதி என்பதை எதைக்கொண்டு நிரூபிப்பார் என்பதும் விபரமாக இல்லை... குழப்பம் மட்டுமே மிஞ்சும்.....


மீனவ நண்பன்
ஏப் 30, 2025 19:38

சினிமா, கிரிக்கெட், மருத்துவம், அரசாங்கம் ,மந்திரிசபை,எல்லாவற்றிலும் ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்வார்களா


முக்கிய வீடியோ