உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் போராட்டம்: கார்கே அறிவிப்பு

நாடு முழுவதும் போராட்டம்: கார்கே அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுலும், காங்., தலைவர் கார்கேயும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

கண்டனம்

அப்போது கார்கே கூறியதாவது: அம்பேத்கர் குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகள் துரதிர்ஷ்டவசமானவை. உண்மைகளை தெரியாமல், அமித்ஷா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.நேருவை விமர்சிப்பதற்கு முன்னரும், அம்பேத்கரை இழிவுபடுத்துவதற்கு முன்னரும் அவர் முதலில் உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.பார்லிமென்ட் நடவடிக்கைகளை இடையூறு செய்வது எங்கள் எண்ணம் அல்ல. நாங்கள் 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். முக்கியமான விஷயமாக அதானி விவகாரம் இருந்தது. ஆனால், அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 வது ஆண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு விவாதத்தில், அமித்ஷா அம்பேத்கரை அவமதித்தார். இதுதான் அரசியல் கட்சி அல்லது தலைவரின் மனநிலையாக இருந்தால், அது கண்டனத்திற்கரியது.

தடுத்தனர்

அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறுகிறோம். அது நடக்காது என்பது தெரிந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அமித்ஷாவின் கருத்தை திசைதிருப்ப பா.ஜ., சதி செய்கிறது. இதனால் தான் மற்ற விவகாரங்களை எழுப்பி வருகிறது. பா.ஜ., எம்.பி.,க்கள் தான் எங்களை பார்லிமென்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். என்னை அவர்கள் தள்ளிவிட்டனர். இதனால், நிலைதடுமாறி கீழே அமர்ந்துவிட்டேன். அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கார்கே கூறினார்.

ராஜினாமா

பிறகு ராகுல் கூறியதாவது: அதானி குறித்த விவகாரத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக, விவாதத்தை பா.ஜ., தவிர்த்து வந்தது. இதற்கு பிறகு அமித்ஷா ஒரு கருத்தை தெரிவித்தார். பா.ஜ.,வின் கொள்கைகள் அரசியலமைப்பு மற்றும் அம்பேத்கருக்கு எதிரானவை என ஆரம்பம் முதல் கூறி வருகிறோம். இந்த இரண்டுக்கும் எதிராக பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., சிந்தித்து வருகிறது. திசை திருப்பும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவர் முன்பும் அவரது மனநிலையை காட்டி விட்டார். அவர் பதவி விலக வேண்டும் எனக்கூறி வருகிறோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அம்பேத்கர் சிலையில் இருந்து பார்லிமென்டிற்கு சென்றோம். ஆனால், படியில் நின்று கொண்டு இருந்த பா.ஜ., எம்.பி.,க்கள் எங்களை பார்லிமென்டிற்குள் நுழைய அனுமதி மறுத்தனர். ஆனால், உண்மையில், அவர்கள் அம்பேத்கரை அவமதித்தனர். உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

அஜய் சென்னை இந்தியன்
டிச 20, 2024 14:46

இங்கு அம்பேத்கார் 1947 to 1950 களில் உள்ள கால சூழ்நிலையை பார்த்து எழுதிய சட்டத்திற்கும் இப்போது உள்ள கால சூழ்நிலையை பார்த்து மாற்றி அமைக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்து ஏற்று கொள்ள வேண்டும். இங்கு அம்பேத்கார் வை மிக மிக மோசமாக காய படுத்தியது காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தான். முதலில் அம்பேத்கார் 1957 இறந்த பின் அவருக்கு பாரத ராட்னா கொடுக்க பட வில்லை. ஆனால் பல ஆண்டுகள் கழித்து 1970 அதாவது 13 ஆண்டுகள் எடுத்து கொண்டார்கள். ஆனால் நேருக்கு, மற்ற தலைவர்களுக்கு உடனடியாக உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின் உடனே பாரத ரத்னா விருது வழங்க பட்டது. இதை யாரும் கேள்வி கேட்க வில்லை பாஜகவை தவிர.


Anonymous
டிச 20, 2024 09:44

செய்யுராதுக்கு ஒரு வேலையும் இல்லை போலிருக்கிறது.


J.V. Iyer
டிச 20, 2024 04:39

நாட்டை களேபரமாக மாற்ற என்னவழி என்று இந்த ஜார்ஜ் சோரோஸ்-அடிமைகள் கூட்டத்திற்கு அவல் கிடைத்துவிட்டது. இவர்களுடன் மற்ற தேசவிரோத கட்சிகளும் சேர்ந்துகொள்ளும். ஹிந்துஸ்தானை பிளக்க இவர்களின் சதி மக்களுக்கு எப்போதான் புரியப்போகிறது?


Bhakt
டிச 20, 2024 02:12

பப்பு வெள்ளையனே வெளியேறு


C.SRIRAM
டிச 19, 2024 22:16

ஜனநாயகம் என்கிற பெயரில் ஒரு வேலையையும் செய்யாமல் தண்ட சம்பளம் எதற்கு ?. இது போல நேரத்தை வீணடித்தால் எல்ல சலுகைகளையும் உடனடியாக நீக்கிவிட வேண்டும் . இவர்களால் நாட்டுக்கும் கேடு மற்றும் பூமிக்கும் பாரம் . அரசியல் கட்சிகளுக்கும் வருமான வரி அமல் படுத்தப்பட வேண்டும். ஒரு வேலையையும் செய்யாமல் ஐந்து வருடத்தை அப்படியே ஒட்டி விட்டு வாழ்நாள் முழுதும் பென்ஷன். இதெல்லாம் எதற்கு ?.


சாண்டில்யன்
டிச 19, 2024 23:03

நல்ல கேள்விதான் ஆனாலும் ஆள்பவர்கள் காதில் ஏறவேண்டுமே காதற்றவர்களை தேர்ந்தெடுத்த நாம் தான் நொந்து கொள்ள வேண்டும் ஒரே தேர்தல் அதோடு எல்லாவற்றையும் முடித்து விடுவார்கள்


Bhakt
டிச 19, 2024 22:07

ராவுல் வின்சி என்கிற பப்பு அவர்களே எம்ப்ட்டி கணக்கு புக்க தூக்கிட்டு நீ தான் மேன் தாதா சாஹிபை அவமானம் படுத்தற


Bhakt
டிச 19, 2024 22:03

ராவுல் வின்சி தாக்கினாரா இல்லை தாக்க பட்டாரா?


theruvasagan
டிச 19, 2024 21:57

பப்புவும் பப்பிமாவும் கான்கிராஸ் சோலியை முடிக்காம ஓயமாட்டாங்க போல. அந்த வேலைக்கு எடுபிடி ஒரு எண்பது வயசு கொத்தடிமை. ஏற்கனவே இண்டி கூட்டணியில் இருந்து கல்தா குடுக்க மத்த கட்சிகாரனுக ரெடியாயிட்டாங்க. நல்ல விஷயம். சட்டுபுட்டுன்னு செஞ்சு முடிங்க..


nv
டிச 19, 2024 21:55

முதல்ல நாடு முழுவதும் deposit வாங்குங்கள்!! பின்னர் போராட்டம் பண்ணலாம்..


Bhakt
டிச 19, 2024 21:53

கருகே ஒரு பொய்யர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை