வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எத்தனை C க்கு நடந்த குதிரை பேரமோ
ஆட்களை மட்டும் தூக்கினா அது திமுக காங்கிரஸ் எம்பிகளை தூக்கானால் அது பாஜக
புதுடில்லி: ஒடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சி ராஜ்யசபா எம்.பி. தன் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் ஐக்கியமானார்.ஒடிசாவில் பிரதான மாநில கட்சியான பிஜூ ஜனதா தள கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சுஜித்குமார் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இதையடுத்து இன்று டில்லி சென்ற சுஜித்குமார், ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தங்கரிடம் வழங்கினார்.கையோடு டில்லியில் பா.ஜ., மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து அவரது முன்னிலையில் பா.ஜ.,வின் தன்னை இணைத்துக்கொண்டார்.
எத்தனை C க்கு நடந்த குதிரை பேரமோ
ஆட்களை மட்டும் தூக்கினா அது திமுக காங்கிரஸ் எம்பிகளை தூக்கானால் அது பாஜக