உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்படை ஒத்திகை: திருவனந்தபுரத்தில் விமான சேவை நிறுத்தம்

கடற்படை ஒத்திகை: திருவனந்தபுரத்தில் விமான சேவை நிறுத்தம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய கடற்படை ஒத்திகை காரணமாக, நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை ஒரு வார காலம் விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.2025 கடற்படை தின செயல்பாட்டு ஒத்திகை நிகழ்ச்சி, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சங்கமுகம் கடற்கரையில் டிசம்பர் 3, அன்று நடைபெறவுள்ளது.இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:இந்திய கடற்படையின் 2025 ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு ஒத்திகை காரணமாக, நவம்பர் 27 முதல் டிசம்பர் 3, 2025 வரை தினசரி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விமான சேவைகள் நிறுத்தப்படும்.ஒவ்வொரு நாளும் மாலை 4:00 மணி முதல் மாலை 6:15 மணி வரை விமானச் சேவைகள் நிறுத்தப்படும்.இந்த நேரங்களில் விமானப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களின் விமான அட்டவணையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த கடற்படை ஒத்திகையின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம்.இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்