உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எட்டே மாதத்தில் விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை: மீண்டும் கட்டுவோம் என்கிறார் மஹா., துணை முதல்வர்

எட்டே மாதத்தில் விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை: மீண்டும் கட்டுவோம் என்கிறார் மஹா., துணை முதல்வர்

மும்பை: 'சிவாஜி சிலை விழுந்து உடைந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.உடைந்த இடத்தில் மீண்டும் சிவாஜி சிலை கட்டுவோம்' என மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்தார்.இந்திய கடற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்படை சார்பில், கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திறக்கப்பட்டு எட்டு மாதத்தில், ஆக.,26ம் தேதி பலத்த காற்றின் காரணமாக, சிவாஜயின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியது.

மீண்டும் அதே இடத்தில்!

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் தேவேந்திர பட்னாவீஸ் கூறியதாவது: சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சோகமான நிகழ்வு. இதனை அரசியல் ஆக்க வேண்டாம். சிலை அமைக்கும் போது காற்றின் வேகத்தை சிற்பி ஆய்வு செய்யவில்லை. கடற்படை உதவியுடன் இதே இடத்தில் புதிய சிலையை நாங்கள் கட்டுவோம். சிவாஜி சிலை உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. சிவாஜியின் படையை சேர்ந்தவர்கள் இவ்வாறு புகைப்படங்கள் எடுக்கமாட்டார்கள். இதனை ஜனநாயக ரீதியில் நாங்கள் முறியடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D.Ambujavalli
ஆக 28, 2024 16:39

கட்டி, உடைத்து, மீண்டும் கட்டி ……. இது என்ன குழந்தைகள் Lego விளையாட்டா ? அந்த ஒப்பந்தக்காரர் யார் யாருக்கு எவ்வளவு 'கொடுத்த' மீதியை இதைக் காட்டினாரோ? திரும்ப contract பிடித்து, அவனிடமும் 'வாங்கி' அதுவும் இதே அழகில் இருக்காது என்று என்ன உத்தரவாதம் ? வரிப்பணம் வாரிவிடப்படுகிறது, மக்கள் வயிறெரிகிறது இவர் அரசியல் ஆக்காதே என்கிறார்


கனோஜ் ஆங்ரே
ஆக 28, 2024 13:36

இங்கே கூட்டமா ஒருத்தரை கழுவி, கழுவி ஊத்துன ஆளு... 2000ஆம் ஆண்டே... அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல், இந்தியப் பெருங்கடல் என உலகத்தின் மூன்று பெருங்கடல்கள் சந்திக்கும் இந்தியாவின் தென்கோடி முனையும் - வடகிழக்கு, தென்மேற்கு மழைக்காலங்களில் மணிக்கு 50 முதல் 100 கிலோமீட்டர் காற்று வீசும், புயல் தாக்கும் குமரி முனையின் கடல் நடுவே 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு கற்சிலை அமைத்தார்... அச்சிலையை “சுனாமி” எனும் ஆழிப் பேரலையே அசைத்து பார்க்க முடியவில்லை... அப்படிப்பட்ட மாபெரும் சிலை 24 ஆண்டுகளாக, தமிழனின் கல் கட்டிடக் கலையை பறை சாற்றுகிறது... இந்திக்காரனுங்க கரையோரமா கட்டின 30 அடி சிலை 40 கிலோமீட்டர் வேக காற்றுக்கே.. அமைத்து ஒரு ஆண்டுக்குள்ளாரவே நொறுங்கி விழுந்திடுச்சு...? இங்கே இருக்குற அறிவாளிங்க 133 அடி உயர சிலை கட்டுனவரை கழுவி, கழுவி ஊத்துறானுங்க... ஆனால், 30 அடி சிலை சின்ன காற்றுக்கே தாங்காம சிதைஞ்சு போன சிலைய கட்டுனவரை வாழ்த்திட்டிருக்கானுங்க... என்னத்த சொல்றது...


Sridhar
ஆக 28, 2024 14:58

தமிழ்நாட்டுல மட்டும்தான் அறிவிலிங்க சிலையை திறந்துவச்சவன்தான் அத கட்டினான்னு நினைப்பானுங்க. நீ 133 அடி கட்டினா அவன் 597 அடி உயரத்துல படேலுக்கு சிலை கட்டியிருக்கான்ல? அப்போ குஜராத்தி உன்னோட உயர்ந்தவனா? கட்டுவ ஏன் கழுவி ஊத்தறோம்னா அது அந்த ஆளோட அசிங்கமான சிந்தனை ஓட்டங்களுக்காகவும் தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறப்புகளை சீரழித்து ஆபாச பேர்வழிகளை முன்னிறுத்தி தமிழர்களின் வரலாற்றை அவர்களுக்கே மறக்க செய்த பாதக செயல்களுக்காகவும், வாரிசு அரசியல் பரம்பரை ஆட்சி தத்துவத்தை கொண்டுவந்து அதன்மூலம் தமிழகத்தின் ஞான ஒளி அறிவுச்சுடர் வள்ளுவனின் சிலை உயரத்தை விட தன சிலை அதிக உயரம் இருக்கவேண்டும் என்ற நினைப்பை தூண்டினானே, அதற்காகத்தான்.


nagendhiran
ஆக 28, 2024 11:06

பாமரன்? எவனும் அவண் அப்பன்வீட்டு காசுல கட்டல


S R Rajesh
ஆக 28, 2024 10:56

உடைந்த இடத்தில் மீண்டும் சிவாஜி சிலை கட்டுவோம் - எவன் அப்பன் வூட்டு காசு? என்னடா இது? நீங்க பண்றது அரசியல் இல்லையா ? சிவாஜிய கூட விட்டுவைக்கலயா ?


பாமரன்
ஆக 28, 2024 08:36

எவன் அப்பன் வூட்டு காசுல கட்டுவீங்கன்னு நாகரீகமான பதிவுகள் நம்ம பகோடாஸ் கிட்ட இருந்து வந்திருக்கனும்... ம்ம் ம்ம் நம்ம கம்பெனி மேட்டர்... மியாவ் மியாவ்


முக்கிய வீடியோ