உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்காவை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் போட்டி

பிரியங்காவை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் போட்டி

கோழிக்கோடு: வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவை எதிர்த்து, பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலர் நவ்யா ஹரிதாஸ், 36, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கேரள மாநிலம், வயநாடு லோக்சபா எம்.பி.,யாக வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலி எம்.பி., பதவியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அத்தொகுதிக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா, இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சத்யன் மொகேரி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலரும், கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலருமான நவ்யா ஹரிதாஸ் நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இது குறித்து நவ்யா கூறுகையில், ''வயநாடு தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. காங்கிரசால் அந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது.''எப்போதாவது தொகுதிக்கு வரும் எம்.பி., தேவையில்லை. எப்போதும் தங்களுடன் இருக்கும் ஒருவரையே வயநாடு மக்கள் விரும்புகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mohan
அக் 23, 2024 16:52

,ரொம்ப ஒன்னும் எதிர்பார்க்க வேண்டாம் மக்களே இரண்டு முறை திரு ராகுல் வின்சி கந்தியை தேர்ந்தெடுத்த அதே மக்கள் தான் தங்களது மத ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் ராகுலுக்கு ஒதுக்கி தேசிய நீரோட்டத்திலிருந்து கேரளா விலகிச் சென்று வேற்றுமத அடிப்படைவாதிகள் மற்றும் நகரத்து நக்ஸல்கள் கையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டுள்ள உண்மைக கள நிலவரம் யாரும் மறுக்க இயலாது. """கடவுளின் சொந்த தேசம்""" வந்த மக்கள் தேசமாகி, வீணாகி தங்களை வளர்த்த தேசத்தின் முதுகில் குத்திவிட்டது. அதனை மாற்ற இன்னொரு பரசுராமன் தான் வரவேண்டும்


RAMAKRISHNAN NATESAN
அக் 20, 2024 10:07

நவ்யா ஹரிதாஸ் வெற்றி பெறவேண்டும் ......


raja
அக் 20, 2024 09:43

என்ன இருந்தாலும் நமது விடியல் தரும் முதல்வரின் தொப்புள் கொடி உறவுகள் பாதி அவர்களின் உறவு இரத்தம் கலந்திருப்பவருக்கே ஒட்டு போடும்....


VENKATASUBRAMANIAN
அக் 20, 2024 08:19

கேராளாவில் படித்தவர்களே அதிகம். எப்படி தேர்ந்து எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.


R K Raman
அக் 20, 2024 22:14

மத ரீதியாக ஓட்டு விழும் என்பதால் டெபாசிட் கிடைத்தால் பெரிய விஷயம்


சிவா அரவங்காடு நீலகிரி
அக் 20, 2024 07:54

வாழ்த்துக்கள்.


K.SANTHANAM
அக் 20, 2024 00:58

நவ்யா ஹரிதாஸ் வெற்றிபெற வாழ்த்துக்கள். ஏமாற்றிய ராகுல் காந்திக்கு பாடம் கற்பிக்க வயநாடு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை