உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர் பலி

நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர் பலி

பிஜாப்பூர் : சத்தீஸ்கரில் நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில், அம்மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த திஜாவு ராம் பவுரியா நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஆயுதங்களுடன் வந்த நக்சல் அமைப்பினர் சிலர், அவரை கோடாரியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், பவுரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நக்சல் தாக்குதலில், பாதுகாப்பு படை வீரரின் தலை துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற நக்சல் அமைப்பினரை, பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ