உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது உள்துறை அமைச்சகம்!

நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது உள்துறை அமைச்சகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்துள்ளார்.நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சரண் அடையும் வரையோ, பிடிபடும் வரையோ அல்லது கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறி இருந்தார்.இந் நிலையில், நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்துள்ளார். அவர்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது; இது வரை நடந்தது தவறு, நாங்கள் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கிறோம், சரண் அடைய விரும்புகிறோம் என்ற குழப்பத்தை பரப்பும் வகையில் நக்சல்கள் தரப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அவர்களுக்கு சண்டை நிறுத்தம் இருக்காது என்று நான் அறிவிக்கிறேன்.நீங்கள் சரண் அடைய விரும்பினால், சண்டை நிறுத்தம் தேவையில்லை. உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள். ஒரு தோட்டா கூட உங்களை நோக்கி பாயாது. சரண் அடைய விரும்பினால் சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கிறது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிந்தனை
செப் 29, 2025 15:03

அப்பாடா நன்றி, நன்றி இது தெய்வத்தின் குரல் வாழ்க இறையாண்மை


rama adhavan
செப் 28, 2025 22:54

முழுவதும் வேருடன் நசுக்க வேண்டும், அழிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் வளராது.


Mahendran Puru
செப் 28, 2025 21:46

நம்முடைய குறிக்கோளே நிராயுதபாணிகளை கொன்று போட்டு நக்சல்களை ஒழித்து விட்டோம் என்று முழங்கி அரைகுறை அறிவு ஜீவிகளை கை தட்ட வைத்து தேர்தல் பரப்புரை செய்வதுதான்.


N Sasikumar Yadhav
செப் 28, 2025 23:26

உங்கள மாதிரியான நகர்ப்புற நக்சல்களை அழித்தால் காட்டிலுள்ள நக்சலைட்டு பயங்கரவாதிகள் தானாக அழிவானுங்க . முதல்ல நகர்ப்புற நக்சலைட்டுகளை அழிக்க வேண்டும்


vivek
செப் 29, 2025 08:45

கடுகளவு மூளை இருந்தால் எப்படி கருத்து போடுவாய்


சிவா. தொதநாடு.
செப் 28, 2025 21:45

என்ன பெரிய உள்துறை அமைச்சர் ஆயுதம் இல்லாத திராவிடர்களை தூக்கு யோசிக்கிறார்கள்


sankaranarayanan
செப் 28, 2025 21:34

இஸ்ரேல் அதிபர் நெதன்யாஹு சொல்வது போன்றே உள்ளது


சிவா. தொதநாடு.
செப் 28, 2025 21:31

ஆயுதம் இல்லா நக்சல்கள் திமுகவை பற்றி நீங்கள் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்


புதிய வீடியோ