உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வி மையங்களாக மாறிய நக்சல் மையங்கள்: ராஜ்நாத் சிங் பேச்சு

கல்வி மையங்களாக மாறிய நக்சல் மையங்கள்: ராஜ்நாத் சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: '' ஒரு காலத்தில் நக்சல் மையங்களாக இருந்த அனைத்தும் தற்போது கல்வி மையங்களாக மாறி வருகின்றன, '' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய அல்லூரி சீதாராம ராஜூவின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:நக்சல் மையங்கள் அனைத்தும், கல்வி மையங்களாக மாறி வருகின்றன.பழங்குடியின பகுதிகள் நக்சலைட்களின் விஷத்தை எதிர்கெள்ள வேண்டிய கடினமான நேரம் இருந்தது. இருப்பினும், அந்த விஷத்தை விரைவாக ஒழித்து வருகிறோம். நக்சலைட் வழித்தடங்கள் என முன்னர் அறியப்பட்ட இடங்கள் அனைத்தும் தற்போது வளர்ச்சிக்கான வழித்தடங்களாக மாறி வருகின்றன. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில், பல பழங்குடியின கிராமங்கள் இன்னும், டிஜிட்டல் உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூலை 05, 2025 06:59

மெடல் குத்திக்கும்.போது மட்டும் 10 வருஷத்தில் எகானமி டபுளாயிருச்சு, எல்லிருக்கும் வூடு குடுத்தாச்சுன்னு பேசுவாய்ங்க தேறலைன்னா, 75 வருசமா ஒண்ணுமே நடக்கலைன்னு ஆரம்பிச்சிருவாங்க. 75 வருசமா அகமதாபாத் விமான விபத்து மாதிரி நடக்கலையேன்னா எஸ்கேப்.


MARUTHU PANDIAR
ஜூலை 05, 2025 01:36

டுமீல் நாட்டுல கல்வி மையங்களை கலவி மையங்களா மாற்றும் கும்பல் இருக்கே? அங்க ஊட்டியில் 21 மாணவியரை அந்த அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிருக்கானே? அடுத்த நிமிஷம் டிஸ்மிஸ்ஸா பண்ணிட்டாங்க? அப்படீன்னு பேசிக்கறாங்க.


Ramesh Sargam
ஜூலை 04, 2025 22:05

தமிழகத்தில் மட்டும் கல்வி மையங்கள் களவாளி மையங்களாகவே உள்ளன.


Thravisham
ஜூலை 04, 2025 21:22

தமிழகத்தில் திருட்டு த்ரவிஷன்கள் பல கல்வி நிலயங்கள் திருட்டு குடும்பத்தின் ஆக்டோபஸ் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டன. மத்திய அரசாங்கம் முதல்ல இத கவனியுங்க


முக்கிய வீடியோ