உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்

2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிக்க இந்தியா தயாராக உள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து, அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்க மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நமது நாட்டில், இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து வெறும் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய மைல்கல். பா.ஜ., அரசு நக்சலிசத்தை ஒழிக்க இரக்கமற்ற அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. இடைவிடாத முயற்சிகளுடன் வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் வேரோடு நக்சலிசத்தை ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kulandai kannan
ஏப் 01, 2025 22:33

மோடி அரசின் இரண்டு தலை சிறந்த சாதனைகள், நக்சல் குழுக்களையும், வெடிகுண்டு கலாசாரத்தையும் முழு முனைப்போடு நசுக்குவதுதான். ஆனால் திராவிடியாக்களுக்கு முக்கியம் கடலைமிட்டாய்க்கு போடப்படும் GST தான்.


என்றும் இந்தியன்
ஏப் 01, 2025 17:37

திராவிடம், இதையும் நக்சலிசம் கூட இணைக்கவும்


அப்பாவி
ஏப் 01, 2025 15:27

அதுக்குள்ள ஒழிக்கறதுக்கு புதுசு புதுசா வந்துரும்.


naranam
ஏப் 01, 2025 14:46

அடுத்தது நகர்புற அர்பன் நக்சல்களையும் ஒழிக்க வேண்டும்.


Mr Krish Tamilnadu
ஏப் 01, 2025 14:18

பக்கத்தில் உள்ளவனை அடித்து, எதிரியை பயமுறுத்துவது போல, உள்ளூர் தீவிரவாதத்தை ஒழித்து, அண்டை நாடுகளுக்கு பலத்தை காட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள்.


பாமரன்
ஏப் 01, 2025 13:54

சொம்மா இந்தியா வல்லரசு ஆகிடும்னு உருட்டுர மாதிரி இது ஒரு புது உருட்டு ஆயிடிச்சு... இவிங்க ஆட்சி வந்த பிறகு என்னத்த குறைச்சாங்கன்னு தெர்ல...


venugopal s
ஏப் 01, 2025 13:41

2029 மார்ச் 31க்குள் பாஜகவை ஒழிக்க மக்கள் முடிவெடுத்தால் நாடு நன்றாக இருக்கும்!


Mettai* Tamil
ஏப் 01, 2025 13:59

2026 ல் ஊழலை,தேச பிரிவினைவாதத்தை,இந்து மத வெறுப்பை ,போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மக்கள் முடிவெடுத்தால் தமிழ் நாடு நன்றாக இருக்கும்


Rajan A
ஏப் 01, 2025 17:34

டாஸ்மாக்கில் விழுந்து இருந்தால் இப்படித்தான் தோன்றும். தெளிவான புத்தி இருக்காது. வெறும் 200க்காக ஊளையிட நிறைய மந்த புத்திக்கள் உண்டு


Mediagoons
ஏப் 01, 2025 13:33

தங்கள் எதிரிகளை சமாளிக்க நிறைய வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன


Rajan A
ஏப் 01, 2025 13:31

அப்படியே நம்ம ஊர்ல நிறையவே ஒழிக்க வேண்டியது இருக்கு. கொஞ்சம் அதுக்கும் நேரம் ஒதுக்கலாமே


Mediagoons
ஏப் 01, 2025 13:26

கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினமும் இப்படித்தான் கூறுகிறார்கள்?. எதுவும் குறையவில்லை


Mettai* Tamil
ஏப் 01, 2025 14:02

கிட்டத்தட்ட 80 வருஷ பிரிவினைவாத ஆலமரம் , காலதாமதம் ஆகும் ...


புதிய வீடியோ