மேலும் செய்திகள்
5 நக்சல்கள் சுட்டுக்கொலை
22-Oct-2024
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டத்தில், மீண்டும் நக்சல் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.உடுப்பி, கார்கலாவின் ஈது கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கு இடமாக சிலர் நடமாடுவதாக தகவல் வந்தது. இவர்கள் நக்சலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.இதையடுத்து, நக்சல் தடுப்புப் படையினர் அங்கு சென்று, பரவலாக தேடினர். கிராமத்தினரிடம் தகவல் சேகரித்தனர். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.இந்நிலையில், சிக்கமகளூரு, கொப்பாவின் யககுந்தி கிராமத்தில் நக்சல்கள் ஊடுருவியதாக தகவல் வந்தது.வனப்பகுதி ஆக்கிரமிப்பு, கஸ்துாரி ரங்கன் அறிக்கை குறித்து, கிராமத்தினருடன் நக்சல்கள் ஆலோசனை நடத்தியதாகவும், சில வீடுகளுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.சிக்கமகளூரு எஸ்.பி., விக்ரம் ஆம்டே மற்றும் நக்சல் தடுப்புப் படை எஸ்.பி., ஜிதேந்திரா தலைமையிலான அதிகாரிகள், சிக்கமகளுரு சென்று மக்களிடம் விசாரிக்கின்றனர்.எடகுந்தி கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கிராமத்தில் நக்சல் தடுப்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். 'இதுவரை நக்சல்கள் இருப்பதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என, நக்சல் தடுப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
22-Oct-2024