உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கரில் கரியாபந்த் மாவட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் நக்சல் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. மத்திய மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர், சிறப்பு அதிரடி படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து வனப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மெயின்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி, நக்சல் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=30qszghm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், இரண்டு பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், கோப்ரா பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், இன்று (ஜன., 21) சத்தீஸ்கர் மாநிலத்தில் கரியாபந்த் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் ரூ. 1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட, நக்சலைட் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார் என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மிகப்பெரிய அடி!

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: நக்சலைட்டுகளுக்கு மிகப்பெரிய அடி. நக்சலைட்டுகள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதில், நமது பாதுகாப்பு படை மிகப்பெரிய வெற்றியை பெ ற்றுள்ளன. சி.ஆர்.பி.எப்., மற்றும் ஒடிசா, சத்தீஸ்கர் மாநில போலீசார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுலைமான்
ஜன 21, 2025 14:03

நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை என்று எழுதியுள்ள தினமலருக்கு எனது கடுமையான கண்டணங்கள். தீவிர தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் பலி என்று எழுதுங்கள்.


A1Suresh
ஜன 21, 2025 13:31

டாங்கிரேஸ் அரசுக்கும் பாஜக அரசிற்குமான நெடு வாசி இதுவே. மடுவிற்கும் மலைக்குமுள்ள வாசி.


Ramesh Sargam
ஜன 21, 2025 13:04

சிறப்பான செயல். ஸ்வீட் எடு, கொண்டாடு. நமது வீரர்களுக்கு கொடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை