உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

டில்லியில் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷாவை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள், அதை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருந்தார்.தொடர்ந்து, டில்லி சென்ற அவர், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். இன்று நிருபர்களை சந்தித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு இருந்ததாக கூறியிருந்தார்.இந்நிலையில், இன்று( டிச.,14) இரவு அமித்ஷாவை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venugopal S
டிச 15, 2025 09:47

அடுத்து எங்கு விளக்கு ஏற்றலாம் என்று ஆலோசனை செய்து இருப்பார்களோ?


Oviya Vijay
டிச 15, 2025 07:33

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நம் பாஜக கூட்டணி தோற்கப் போகிறது என்பது கண்கூடாக தெரிகின்ற காரணத்தினால், தேர்தல் முடிந்ததும் நீங்கள் என்னை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தூக்குவதற்கு முன் நானே எனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை தங்களிடம் கொடுத்துச் செல்லவே டில்லிக்கு பயணப்பட்டு வந்தேன். தயவு கூர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு சிரம் தாழ்த்தி கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்...


N.Purushothaman
டிச 15, 2025 07:24

திருவனந்தபுரம் தேர்தலில் பா.ஜ வென்றவுடன் இங்க இருக்குற திருட்டு திராவிடன் ஐ லவ் பாகிஸ்தான் கும்பல் எல்லாம் கதறி ஒப்பாரி வெக்கிறானுங்க... போதாக்குறைக்கு மும்தாஜ் என்கிற இஸ்லாமிய பெண் திருச்சூரில் பா.ஜ சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவனுங்க கதறலுக்கு இன்னொரு முக்கிய காரணம் ...


Kasimani Baskaran
டிச 15, 2025 04:13

அமித்ஷா ஏன் பாஜக தலைவரை சந்தித்தார் என்று புரிந்து கொள்வது சிரமம்..


Murugesan
டிச 15, 2025 00:01

பாஜக நோட்டா தான்


சமீபத்திய செய்தி