உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்

தேஜ கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும்; பாஜவுக்கு பெருகிய ஆதரவு; கருத்துக்கணிப்பில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டி கூட்டணிக்கு பின்னடைவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பாஜ மொத்தம் உள்ள 543 இடங்களில் 240 இடங்களை மட்டுமே பெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவால் 293 இடங்களுடன் 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதேவேளையில், இண்டி கூட்டணி 234 இடங்களை பிடித்தது.இந்த நிலையில், இண்டியா டுடே மற்றும் சி வோட்டர் மூட் இணைந்து, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆக., 14ம் தேதி வரையில் தேசிய அளவில் கருத்துக் கணிப்பை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 2,06,826 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதன்படி, இன்றைய தேதியில் தேர்தலை நடத்தினால் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டி கூட்டணிக்கு 208 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, என்டிஏ கூட்டணியை பொறுத்தவரையில் 2024 லோக்சபா தேர்தலில் 44 சதவீத ஓட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது 46.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2.70 சதவீதம் கூடுதலாகும். பாஜவை பொறுத்தவரையில 2024 லோக்சபா தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வென்றிருந்து பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாக இருந்தது. இந்த நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பில் 260 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.காங்கிரசை பொறுத்தவரையில், 2024 லோக்சபா தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இது தற்போது 97 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஆப்பரேஷன் சிந்தூர், பீஹார் ஓட்டு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குப் பிறகு, பாஜவுக்கு ஆதரவு பெருகி வருவதே இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

R SRINIVASAN
செப் 02, 2025 19:24

இந்தியாவை ஆண்ட நவாப்கள் கூட நியாய தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடந்தார்கள். ஆனால் இந்தியாவை ஆண்ட நேரு குடும்பம் ஊழல் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்கள். ராணுவ வீரர்களை பலி கொடுத்தார்கள். ஜாதி மத மோதலை அவிழ்த்து விட்டார்கள். நேர்மையாக நடந்த மொரார்ஜி தேசாய் அரசை கவிழ்த்தார்கள். தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காததால் அந்த தீவிரவாதிகளால் இந்திராவும், ராஜீவும் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் வல்லபாய் படேலுக்கு பிறகு இரும்பு மனிதராக திகழும் மோடிஜி ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேறியிருக்கிறார்கள். இன்னும் 20 வருடம் மோடிஜி அவர்களே இந்தியாவின் பிரதமராக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அதே சமயம் காங்கிரஸ் வலுவான எதிர் கட்சியாக இருக்க வேண்டுமென்றால் குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்க வேண்டும்.


S.jayaram
ஆக 31, 2025 07:26

ட்ரம்ப், ராகுல் இருவரையும் வீழ்த்தினாலே போதும் இன்னும் 100 ஸீட் கிடைக்கும்


Abdul Rahim
ஆக 30, 2025 18:30

ஒட்டு திருட்டுக்கு இப்பவே அச்சாரம் .


xyzabc
ஆக 30, 2025 23:54

ஆமாம் . பாகிஸ்தானியர், பங்களாதேஷி களுடைய வோட்டையும் போடுவோம். 2024 லோக்சபா தேர்தலில் கோவையில் லட்ச கணக்கான பா ஜ க வாக்காளர்கள் காணாம போனது எப்படி ? திருடர்கள் எங்கே ?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 07:29

“சார் ஸோ பார்” ன்னு கூவி கும்மாளமிட்டு கொண்டிருந்த, பாவம் அடி வாங்கி மைனாரிட்டி ஆன கூட்டம், இப்போ “தீன் ஸோ சப்பீஸ்” க்கே குத்தாட்டம் போடுது. முடிவு இருநூறுக்கே இழுத்துக்க போகுது போல.


Shivakumar
ஆக 30, 2025 11:32

உனக்கு அந்த வருத்தம் வேண்டாம். அடுத்த தேர்தலில் சார் ஸோ பாருக்கு மேலயே வெற்றி பெரும். உங்க ஆட்டம் இனிமேல் செல்லாது.


Abdul Rahim
செப் 02, 2025 17:50

நீ சொல்ற அதுக்கும் சேர்த்துதான் ஒட்டு திருட்டு னு சொல்றோம் ஆனா விடாமா மாமா கமிஷனுக்கு வக்காலத்து வாங்குறது யாரு ?


K V Ramadoss
செப் 04, 2025 20:40

இன்றைய இந்தியா டுடே செய்தி இதைத்தான் உறுதிப்படுத்தியிருக்கிறது


ramesh
ஆக 29, 2025 17:39

கருத்து கணிப்பில் பாதி தான் வந்துள்ளது


Rathna
ஆக 29, 2025 17:15

இறந்து போனவன், பங்களாதேஷி போன்றவர்களை வோட்டு சீட்டில் சேர்த்தால் தானே நாங்கள் ஜனநாயகத்தை மாற்றி ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மாதிரி ஜிஹாதி அரசை கொண்டு வர முடியும். எல்லாரையும் பிச்சை எடுக்க வைத்து, தெருவில் கலவரத்தை உண்டாக்குவது தானே நாட்டிற்கு நாங்கள் செய்யும் முதல் கடைமை. இதை டெல்லி, ஜார்கன்ட், சேட்டன் நாடு மற்றும் வேறு சில மாநிலங்களில் பரிச்சை செய்து பார்த்து தானே நாங்கள் இந்த நல்ல முயற்சியை எடுக்கிறோம்.


Iyer
ஆக 29, 2025 14:38

சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷிகளை விரட்ட ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார் - மம்தா? சுமார் 1 கோடி சட்டவிரோத பங்களாதேஷி வோட்டர்கள் கள்ளத்தனமாக மம்தாவுக்கு வோட்டளிக்கின்றனர் மீண்டும் மீண்டும் மம்தா ஜெயிப்பதின் ரஹஸ்யம் இதுதான். மேற்குவங்கத்தில் - இனி SIR தொடங்கும். கள்ளவோட்டர்கள், இறந்தவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் SIR முறையாக நடந்தால் மம்தாவுக்கு அடுத்த தேர்தலில் 50 சீட்டு கூட கிடைக்காது


Shivakumar
ஆக 30, 2025 02:23

SIR தமிழ்நாட்டிலும் தேர்தல் கமிஷன் அமல்படுத்த வேண்டும்.


Iyer
ஆக 29, 2025 14:34

இறந்து போனவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ? இறந்து போனவர்களின் பெயரில் கள்ளவோட்டு போடுவது இனி முடியாது. RJD , CONGRESS கட்சிகளுக்கு இது பெரும் இழப்பு தான்.


A.Gomathinayagam
ஆக 29, 2025 14:04

இது ஜூலை கணிப்பு ஆகஸ்ட் ???


Gokul Krishnan
ஆக 29, 2025 12:49

இங்கு பிஜேபி அரசின் தவறுகளை ஆணவத்தை பொய்களை சுட்டி காட்டினால் உடனடியாக தி மு க அரச தவறு செய்யவில்லையா என்று வாக்காலத்து வாங்குகிறார்கள் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை எனது கருத்தில் எங்காவது தி மு க மிக நல்லாட்சி தருகிறது அது உத்தம கட்சி ஊழல் செய்யாத கட்சி வாக்கு போடுங்கள் என்று சொல்லி இருக்கேனா தி மு க ஒரு மாதிரி தில்லு முல்லு செய்தால் பிஜேபி வேறு மாதிரி தில்லு முல்லு செய்கிறது . தவறு எந்த கட்சி செய்தாலும் பாகுபாடு இல்லாமல் கருத்து பதிவிடுங்கள்


vivek
ஆக 29, 2025 13:22

வந்துட்ட கருத்து போட...


comman indian
ஆக 29, 2025 13:42

இதோ நி வந்துடல நீயே சொல்லு நல்ல கருத்தா கேப்போம் .....


Mettai* Tamil
ஆக 29, 2025 15:16

நல்ல முட்டு . TR பாலு நல்லா பொங்குது ....


Gokul Krishnan
ஆக 29, 2025 15:51

விவேக் நீயே கருத்து பதிவிடும் போது என் கருத்து பதிவிப் எந்த தவறும் இல்லை கேள்வி கேட்டால் அதற்கு சரியான விளக்கத்தை உன்னை போன்றோர் தர இயலாது


vivek
ஆக 29, 2025 17:15

வைகுண்டேஷ்வரன் புது அவதாரம்


K V Ramadoss
செப் 04, 2025 20:47

அரசியல் கட்சி எதுவும் 100% யோக்கியமல்ல.. Politics is the last resort of the scoundral என்பது உண்மைதான்.. ஆனாலும் இருக்கும் கட்சிகளில் எது சிறந்தது என்பதுதான் முக்கியம்..ஏனெனில் நமக்கு வேறு கதி இல்லை.. அந்தளவில் பிஜேபி பல விதத்திலும் உயர்ந்தது.. அனுபவமற்ற, பிதற்றுகின்ற ராகுல் ஏதாவது உருப்படியான யோசனை கூறியிருக்கிறாரா ? மோதி அவர்களுக்கும் ராகுலுக்கும் மலைக்கும் மடுவிற்கும் போல


முக்கிய வீடியோ