உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு கோடி பேருக்கு வேலை: பீஹாரில் தேஜ கூட்டணி வாக்குறுதி

ஒரு கோடி பேருக்கு வேலை: பீஹாரில் தேஜ கூட்டணி வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை பீஹாரில் தேஜ கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம் மாநில சட்ட சபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்ட தேர்தல் வரும் நவ., 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதையொட்டி, லாலு வின் ஆர்.ஜே.டி., எனப் படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் இன்று (அக் 31) தேஜ கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜ தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:* ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.* பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.* ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு முதுகலை பட்டம் வரை இலவச கல்வி வழங்கப்படும்.* விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.* பீஹார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.* பீஹாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.* தேஜ கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும்.* பீஹாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.* இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.* பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.* புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Anantharaman Srinivasan
அக் 31, 2025 19:14

தமிழ்நாட்டிலிருக்கும் பீஹாரிகள் எல்லோருக்கும் பீகாரிலேயே வேலை கிடைச்சு திரும்ப போகிறார்கள்... தமிழ்நாடு கூலி வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடடப்போகுது.


மனிதன்
அக் 31, 2025 22:00

அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்...அப்படிஒருநாள் வருமோ என்னமோ? ஹூம்ம்ம்...


T.sthivinayagam
அக் 31, 2025 16:43

பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பீகாரில் கூட்டணி ஆட்சி செய்யும் பாஜக நிறைவேற்ற பட்ட வாக்குறுதிகளை சொல்லி வாக்கு கேட்காமல் தமிழர்களை வைத்து வாக்கு கேட்பது மிக கேவலமாக உள்ளது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.


சுந்தர்
அக் 31, 2025 16:14

தமிழ் நாட்டுக்கு பாதிப்பேரை அனுப்பி வேலை வழங்கப்படும். இங்க டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் படுஜோர். So நாங்க ஊத்திக்கிட்டு படுத்துக்குவோம்.


M.Sam
அக் 31, 2025 15:55

ஜி ஜி ஜி ஹி ஹி ஹி அந்த பதினைந்து லச்சம் ஜி கீ கீ சிரிப்பை வருது


Priyan Vadanad
அக் 31, 2025 15:49

ஹையா தமிழ்நாட்டிலிருக்கும் பீஹாரிகள் எல்லோருக்கும் வேலை கிடைச்சுடும். நமது பிரதமர் எவ்வளவு அக்கறையுடன் பிஹாரில் தமிழ்நாட்டு பீஹாரிகள் குறித்து வேதனையுடன் பேசினார் என்பதை ....


அப்பாவி
அக் 31, 2025 13:54

ஹையா... எய்ம்ஸ் இருந்தா அதுக்குள்ளே ஒரு ஐ.ஐ.டி. ஐ.ஐ.டி இருந்தா அதுக்குள்ளே ஒரு எய்ம்ஸா? எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க.


அப்பாவி
அக் 31, 2025 13:52

ஆஹா.. இந்தியாவுக்கே வருஷம் ரெண்டு கோடி வேலை குடுத்தவங்க இப்போ பிஹாருக்கு மட்டும் ஒரு கோடி வேலை. பிஹார் ஆளுங்க சீக்கிரம் போய் நிதீஷுக்கும், பா.ஜ வுக்கும் ஓட்டு போடுங்க. அங்கேயே வேலை வாங்கிட்டு செட்டிலாயிடுங்க.


Gokul Krishnan
அக் 31, 2025 13:41

சூப்பரோ சூப்பர் பீகார் மக்களே திரும்ப கேள்வி கேளுங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐந்து லட்சம் கோடி முதலீடாவது பீகாருக்கு வந்து உள்ளதா என்று


KRISHNAN R
அக் 31, 2025 13:13

அள்ளி விடுங்க


திகழ்ஓவியன்
அக் 31, 2025 13:00

10 வருடம் நீங்கள் தான் ஆட்சி ஏன் இது நாள் வரை செய்யவில்லை என்று கேட்க படிச்ச யாரும் இல்லையா


Kumar Kumzi
அக் 31, 2025 13:47

நீட் தேர்வை ஒழிப்பேன்னு பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தாரெ அண்டப்புளுகர் இப்போ அதை பத்தி வாயே தொறக்க மாட்டுறார் அதையும் கேளு


Suppan
அக் 31, 2025 16:20

பிஹாரில் பல தசாப்தங்களாக மிகுந்த கனிம வளம் இருந்தும் தொழிற்சாலைகளை தொடங்கவிடாமல் ஆண்ட அரசுகள் முட்டுக்கட்டை போட்டன. மிகக்க்குறைந்த அளவு கல்விக்கூடங்கள், அதிலும் வசதி இல்லாமை, கணக்கில்லா மின்வெட்டு, தொழிற்சங்கங்களின் அட்டகாசம் என்று இன்னும் பல . இதில் காங்கிரசுக்கும் லாலு கட்சிக்கும் முக்கிய பங்குண்டு. லாலு போன்றவர்களின் தயவில் ரவூடியிசம் தலைவிரித்து ஆடியது. போதாக்குறைக்கு பெருகிவந்த மக்கள்தொகை , ஊடுரூவிவந்தவர்களின் அதாங்க வங்க தேசத்தவர், ரொஹிங்கியாக்கக்ள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையெல்லாம் சரி செய்யப்படாமல் எந்தவிதமான வளர்ச்சியும் வராது.


என்னத்த சொல்ல
அக் 31, 2025 17:28

நீட் தேர்வை மத்திய அரசுதான் மாற்ற முடியும். காங்கிரஸ் ஆட்சி வந்திருந்தால், நீட் என்றோ தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும். மாநில அரசு தீர்மானம்தான் போடமுடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை