உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை; அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை; அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.ரஷ்யா மற்றும் சீனாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பு குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; இந்தியா மீதான அமெரிக்கா விதித்த வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனைப் பாதுகாக்க அரசு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் போல, இந்த விவகாரத்திலும் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 09:35

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் (அணு சோதனை நடத்தியதால்) இதைவிட கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. ஆனாலும் அதையும் தாண்டி புறந்தள்ளி இந்தியா வேகமாக முன்னேறிவிட்டது. அமெரிக்க கடற்படை 7 ம் பிரிவு வருகையைக் கண்டு பயந்த இந்திரா காலம் மலையேறிவிட்டது. இப்போதுள்ளது மாற்றமடைந்த பாரதம்.


மூர்க்கன்
ஜூலை 31, 2025 12:16

அவசரப்படாதே நாளைக்கே நம்பாளு சர்வமும் ட்ரம்ப் நமஹ என்று சரண்டர் ஆனால் என்ன சொல்லி முட்டு கொடுப்பது?? அப்போ நாட்டு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இங்கேயுள்ள தொழில் முனைவோர் விவசாயிகள் பாதிக்க பட்டாலும் பரவாயில்லை நமக்கு அமெரிக்க ஆதரவே போதும்?? என்று முடிவெடுத்தால் என்ன செய்வீங்க?? அப்போ என்ன செய்வீங்க??


மூர்க்கன்
ஜூலை 31, 2025 00:52

இதுதான் தவறான செயல்?? எல்லாமே அப்பாவி மக்கள் தலையில்தான்?? உள்ளூர் கோவில் வரி, சொத்து வரி, வருமான வரி, மாநகராட்சி வரி, கிஸ்தி வரி, மாநில கிஸ்தி , இப்போ சர்வதேச வரி?? சாமானியனின் கோவணத்தை கூட விட்டு வைக்காத ராஜ தந்திரம் . நிம்மி இன்னும் யோசிக்கனும் .


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 31, 2025 00:26

ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் பெட்ரோல் வாங்கியதற்கு மெடல் குத்தி விட்டாங்க. அதனாலே மக்களுக்கு கால் காசு கூட பயனில்லை. பல்லாயிரம் கோடி லாபம் பார்த்தது ஜீயோட நண்பர்கள். அந்த “குற்றத்துக்காக” ட்ரம்ப் வரி போடப்படுகிறது என்று தெரிகிறது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் கஷ்டம் வரும், நஷ்டம் வரும், வேலைக்கு உலை வரும். எண்ணை இறக்குமதியில் கமிஷன் கொள்ளை மற்றும் கொள்ளை லாபம் அடித்தவர்கள் இந்த புது ட்ரம்ப் வரிக்கு பதில் சொல்லணும். அடிச்சவங்களிடமிருந்து ஜீ பணத்தை திருப்பி வாங்குவாரா, இல்லை நிர்மலா மேடம் இன்னும் புதுசா வரி போட்டு முதுகை உடைப்பாங்களா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 30, 2025 23:25

ஜீ அமெரிக்காவுக்கு பறந்து போயி, பல ஆயிரம் கோடிக்கு நமக்கு தேவையில்லாத தளவாடங்களை நம்ம வரிப்பணத்தை வீணாக்கி வாங்கி, ட்ரம்ப் வரியை 15% ஆக குறைத்த விடலாமே ஜீ பக்தர்களும் ஜீ மீடியாவும் ஜீக்கு பொருளாதார நோபல் பரிசு தரணும்ன்னு ஐநாவுக்கு கடிதம் போடலாம்.


AaaAaaEee
ஜூலை 30, 2025 22:42

விஷ பாம்புவுடன் நட்பு வைத்தால் இது தான் ...


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 01, 2025 04:27

பாம்புக்கு பாம்பு விஷம் ஒண்ணும் பண்ணாதாமே?


Ramesh Sargam
ஜூலை 30, 2025 21:43

சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் புடின் பற்றி இப்படி கருத்து பதிவிட்டிருந்தார் - காலையில் நன்றாகத்தான் பேசுகிறார் மாலையில் குண்டு வீசுகிறார் புடின் மீது டிரம்ப் பாய்ச்சல் - இன்று ட்ரம்ப் கூறியதையே சிறிது மாற்றி - காலையில் நன்றாக இருக்கிறார் ட்ரம்ப். நன்றாக தமாஷா பேசுகிறார். ஆனால் இரவு ஆக ஆக எந்த நாட்டின் மீது எவ்வளவு வரி விதிக்கலாம் என்று யோசிக்கிறார். ஏன் இந்த வரி பித்து டிரம்புக்கு? இது எப்படி இருக்கு?


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 01:00

இந்தியர்களால் உலகில் உணவுப் பஞ்சம், அவர்கள் சாப்பாட்டு ராமன்கள் என்று கூறியதும் ஒரு அமெரிக்க........ பெயர் புஷ் .


தாமரை மலர்கிறது
ஜூலை 30, 2025 21:34

நூறு சதவீத வரி போட்டாலும், இந்தியா அசராது இருக்கும். வாஜிபாய் ஆட்சியின் போது, அணுகுண்டு சோதனை நடத்தியபிறகு, அமெரிக்கா கொண்டு வந்த முற்றிலும் பொருளாதார தடையையே இந்தியா கையாண்டது. இருபத்தைந்து சதவீத வரியை பிஸ்கட் சாப்பிடறமாதிரி எளிதாக இந்தியா கையாளும். வேணும்னுன்னா நூறு சதவீத வரி போடுங்க.சீனா மாதிரி இந்தியா அசராமல் ட்ரம்பை மோடி வழிக்கு கொண்டுவருவார்.


Ramesh Sargam
ஜூலை 30, 2025 21:34

பொதுவாக வரி என்றாலே கூடுதல் சுமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும். மத்திய அரசு அந்த வரி சுமையை குறைக்க ஆவண செய்யவேண்டும் மக்கள் நலன் கருதி.


jaiaaa
ஜூலை 30, 2025 22:27

It is NOT related to Indian. India export goods price may increase in USA. So USA may avoid to import goods from India.


புதிய வீடியோ