உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் தேவையா? மஞ்சுநாத்துக்கு கேள்வி

அரசியல் தேவையா? மஞ்சுநாத்துக்கு கேள்வி

பெங்களூரு: “அரசியலில் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று எந்த முட்டாள் சொன்னான்?” என, கன்னட திரைப்பட இயக்குனர் நாகதள்ளி சந்திரசேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளராக, ஜெயதேவா மருத்துவமனை முன்னாள் இயக்குனரும், தேவகவுடாவின் மருமகனுமான மஞ்சுநாத் போட்டியிடுகிறார்.இதுதொடர்பாக கன்னட திரைப்பட இயக்குனர் நாகதள்ளி சந்திரசேகர், தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:எங்கள் அன்பான டாக்டர் மஞ்சுநாத் அரசியலில் நுழைந்தது துரதிர்ஷ்டவசமானது. காரணம் எதுவாக இருந்தாலும் சரி. இங்கு சம்பாதித்ததை அங்கே இழக்கலாம்.அரசியலில் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று எந்த முட்டாள் சொன்னான்? சமுதாயத்தை கட்டியெழுப்ப ஆயிரம் வழிகள் உள்ளன. இது உங்களுக்கு தேவையா மஞ்சுநாத்?இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.இவரின் பதிவுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை