உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் நெட்வொர்க் பிரச்னை : ஏர் இந்தியா விமான விமான சேவை பாதிப்பு

மும்பையில் நெட்வொர்க் பிரச்னை : ஏர் இந்தியா விமான விமான சேவை பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நெட்வொர்க் பிரச்னையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக , செக் இன் அமைப்புகளில் இடையூறு ஏற்படுத்தி உள்ளது. இதனால், விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அமைப்புகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. நிலைமை படிப்படியாக சரியாகி வருவதால், சில விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும். பயணிகள்தங்களது விமான சேவை குறித்துமுன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டில்லியில் பாதிப்பு

டில்லியில் பெய்த கனமழை காரணமாக டில்லியில் 300 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகியது. அங்கு பெய்த கனமழை காரணமாக , விமானங்களை வேறு நகரங்களுக்கு திருப்பி விட முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 09, 2025 20:58

என்னடா இது ஏர் இந்தியா பற்றி எதுவும் செய்தி இன்று வரவில்லையே என்று யோசித்தேன். போட்டுட்டாங்க. நல்லவேளை பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. காலைல பல டிவி சேனல்களில் கூட இன்றைய நாள் இனிய நாள் என்று பல ஜோதிடர்கள் சொன்னாங்க. முதல் தடவ அவங்க ஜோதிடம் பளிச்சிடுச்சு. ஒரு விமான விபத்தும் இல்லாமல் பொழுது சாய்ந்தது. நாளை மலரும் நாளும் இனியநாளாக இருக்கவேண்டும்.


சமீபத்திய செய்தி