மேலும் செய்திகள்
புத்தாண்டு கொண்டாட தங்கவயலில் கட்டுப்பாடு
31-Dec-2024
தங்கவயலை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டம்
06-Jan-2025
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி நியமன உறுப்பினராக கே.பிரியங்காவை நியமித்துள்ளனர்.தங்கவயல் நகராட்சியில் 35 வார்டுகளில் 35 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆறு மாதத்திற்கு முன் நகராட்சியின் நியமன கவுன்சிலர்களாக ஜே.அம்பிகா, ஓ.வி.டேவிட், மோகன்ராஜ், ஜப்ருல்லா செரீப் ஆகிய நான்கு பேரை நியமித்தனர். மேலும் ஒருவரை நியமிக்க வேண்டி இருந்தது. இந்நிலையில் எஸ்.டி.பிளாக் வார்டு முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரின் மனைவி கே.பிரியங்காவை நியமனம் செய்துள்ளனர். அதற்கான அரசு நியமன உத்தரவு, நகராட்சி ஆணையர் பவன் குமாருக்கு வந்துள்ளது. இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், ''தொகுதி எம்.எல்.ஏ ., ரூபகலா வழிகாட்டுதலோடும், எனது கணவரின் ஒத்துழைப்புடனும் பணியாற்றுவேன். ஏற்கனவே, எனது கணவர் எஸ்.டி.பிளாக் வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தவர்,'' என்றார்.
31-Dec-2024
06-Jan-2025