உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முல்லைப்பெரியாறு அணையை கேரள அதிகாரிகள் ஆய்வு செய்ய புதிய படகு அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தகவல்

முல்லைப்பெரியாறு அணையை கேரள அதிகாரிகள் ஆய்வு செய்ய புதிய படகு அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தகவல்

மூணாறு:முல்லைப்பெரியாறு அணையை கேரள அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்கு வசதியாக நீர் வளத்துறை சார்பில் புதிய படகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார்.முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம், மழை அளவு, நீர் வரத்து, தமிழகம் கொண்டு செல்லும் நீரின் அளவு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு கேரள நீர்வளத்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பணிகளுக்கு வனம், போலீஸ் துறைகளுக்கு சொந்தமான படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பல்வேறு அவசர சூழல்களில் படகுகள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு தீர்வு காணும் வகையில் நீர்வளத்துறைக்கு புதிய படகு வழங்குவதாக அத்துறையின் அமைச்சர் ரோஷி அகஸ்டின் உறுதி அளித்து இருந்தார். அதன்படி ரூ.12.40 லட்சம் செலவில் படகு வாங்கப்பட்டது. அது அணையில் அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என அமைச்சர் தெரிவித்தார். 10 பேர் பயணிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ