உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொச்சியில் இருந்து திருச்சி, திருப்பதிக்கு புதிய விமான சேவை

கொச்சியில் இருந்து திருச்சி, திருப்பதிக்கு புதிய விமான சேவை

கொச்சி : கேரள மாநிலம் கொச்சி யில் இருந்து கண்ணுார், மைசூரு, திருச்சி, திருப்பதிக்கு புதிய விமான சேவைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இங்குள்ள கொச்சி விமான நிலையத்தை, கொச்சி சர்வதேச விமான நிலைய நிறுவனம் நிர்வகிக்கிறது. நம் நாட்டிலேயே, அரசும் - தனியாரும் இணைந்து நடத்தும் முதல் விமான நிலையம் இது.இதன் தலைவராக, முதல்வர் பினராயி விஜயன் உள்ளார். இந்த விமான நிலையத்தில் இருந்து பல பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கொச்சியிலிருந்து கண்ணுார், மைசூரு, திருச்சி, திருப்பதிக்கு புதிய விமான சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 'அலையன்ஸ் ஏர்' நிறுவனத்துடன் பேசப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த சேவைகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vijay D Ratnam
ஜன 15, 2024 22:33

அரசும் தனியாரும் இணைந்து நடத்தும் கொச்சி சர்வதேச விமான நிறுவனம் என்ற நிறுவனத்தால் பத்து ஆண்டுகளுக்கு முன் துறைமுக நகரான காரைக்காலில் ஒரு தனியார் க்ரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதே அது என்னவாயிற்று. இப்போது சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியின் மையத்தில் பெரியளவில் வளர்ந்து வரும் காரைக்கால் தனியார் துறைமுகம், தொழிலதிபர் கெளதம் அதானியால் வாங்கப்பட்டு இப்போது அதானி காரைக்கால் போர்ட் ஆகவும் ஆகிவிட்டது. விமான நிலைய பணிகள் ஏதேனும் நடைபெறுகிறதா.


vaiko
ஜன 16, 2024 23:03

எதெற்கெடுத்தாலும் வாயை பிளக்கும் தமிழிசை அண்ட்டி இதெற்கு வாயை திறப்பாளா?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை