உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேறியது!

புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேறியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிய வருமான வரி மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது.பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழமையான வருமான வரிச்சட்டம், 1961ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் லோக் சபாவில் வருமான வரி மசோதா 2025 அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால், இந்த மசோதா மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது பற்றி டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆக.8 விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் குழு அமைத்து பரிந்துரைகளை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி பாஜ எம்.பி., பைஜய்ந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரைத்தது. அவற்றின் அடிப்படையில், திருத்தம் செய்யப்பட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துதல், வரி விகிதங்கள் மற்றும் விலக்குகளில் மாற்றம், வரி தவிர்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளடக்கிய புதிய வருமான வரி சட்ட மசோதாவை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, விவாதம் எதுவும் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஆக 11, 2025 20:25

பத்து கோடிக்கு மேல் உள்ள வருமானத்திற்கு வரியை முற்றிலும் நீக்க வேண்டும். வேண்டுமெனில் ஜிஎஸ்டியை அதிகரித்து கொள்ளுங்கள். பெரும் முதலாளிகள் அதிக வரியால் தினந்தோறும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதனால் இந்தியாவில் முதலீடு குறைகிறது. இந்திய பணம் வெளிநாட்டிற்கு செல்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துபாய் போன்று அதிகரிக்க, உடனடியாக மத்திய அரசு இதை செய்யவேண்டும்.


கூத்தாடி வாக்கியம்
ஆக 11, 2025 17:57

எந்த அரசியல் வாதியும் பாதிகாமல் பா துகப்பா ஒரு சட்டம் போடுங்க. அப்புறம் இந்த எலெக்ஷன் செலவு எத்தன கோடி பண்ணஆளும் லிமிட் குள்ள வரா மாதிரி கணக்கு காண்பிச்சா போதும்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஆக 11, 2025 17:37

ஐயா விவேக், காங்கிரஸ் வேண்டாமென்றுதான் பி.ஜெ.பி ஐ மக்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் யாரையும் நக்கலடிக்க வேண்டாம்.


திகழ்ஓவியன்
ஆக 11, 2025 19:15

அதனால் தான் கார்பொரேட் TAX 30 % இல் இருந்து 22 % என்று குறைத்தார்கள்


SANKAR
ஆக 11, 2025 20:26

congrats senthil.fitting reply.i wish to add that huge tax concession now being given by bjp to bcci was not given by Congress govt.BJP govt gives this conversation by treating bcci as an institution engaged in CHARITABLE ACTIVITIES.


நிக்கோல்தாம்சன்
ஆக 11, 2025 21:08

அப்படியே உங்க கார்பொரேட் குடும்பத்துக்கு உதவுமா போயிடுமா ??


என்றும் இந்தியன்
ஆக 11, 2025 16:25

மிக மிக எளிய வரி சட்டம் இப்படி இருக்கவேண்டும். ரூ 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை - 10% வரி ரூ 11 லட்சம் முதல் 30 லட்சம் வரை - 15% வரி ரூ 30 லட்சம் மேற்பட்டு - 20% வரி. இப்படி செலவு செய்தால் இப்படி சேமித்தால் விலக்கு இவ்வளவு என்று அனாவசியமாக எந்த குளறுபடியும் வேண்டாம்


Raghavan
ஆக 11, 2025 21:28

5 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று ஆரம்பிக்கவேண்டும். 2 லட்சம் என்பது மிக குறைவானது. பெங்களூரில் 15000 மாத சம்பளம் வாங்கியவன் சேர்த்த சொத்தின் மதிப்பு 30 கோடி. இதுவரை அவன் ஒரு பைசா கூட வரிகட்டியிருக்கமாட்டான். லோக் ஆயுத்தாவை தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும்.


ponssasi
ஆக 11, 2025 16:23

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை போல வருமானவரித்துறை சட்டமும் நெகிழ்வு தன்மை கொண்டது, அதை மாற்றவேண்டியது காலத்தின் கட்டாயம். வரவேற்கவேண்டிய ஒன்று ஒவ்வொரு ஆண்டும் எளிமைப்படுத்துகிறோம் என அறிவிப்பு வருகிறது ஆனால் மிக கடுமையாக உள்ளது அதுபோல புதிய மசோதாவும் இருந்துவிடக்கூடாது


Gokul Krishnan
ஆக 11, 2025 15:49

வரி அமைச்சரின் புதிய மசோதாவில் பிசிசிஐ க்கு துளி அளவும் வரி மற்றும் சேதம் இல்லாமல் பார்த்து கொள்வார்


vivek
ஆக 11, 2025 16:54

காங்கிரஸ் ஆட்சியில் அதே பிசிசிஐ....அப்போது நீ கோமாவில் இருந்தாயா கிருஷ்ணா


ஆரூர் ரங்
ஆக 11, 2025 16:56

அடுத்து பொன்முடி மகன் தலைமையிலுள்ள TNCA க்கு வரி போடச்சொல்லுங்க.