உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன் : காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்

உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன் : காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க, மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் விரும்பியதாக, காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த, 1991-ல் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தவர் டி.என்.சேஷன். அப்போது, தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த ராஜிவ், ஸ்ரீபெரும்புதுாரில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 1991, மே 21-ல் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி, 'தி அண்டையிங் லைட்: எ பெர்சனல் ஹிஸ்டரி ஆப் இண்டிபெண்டென்ட் இண்டியா' என்ற தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். அதன் விபரம்:ராஜிவ் கொலையான தகவலை, அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கு முதலில் தெரிவித்தவர், டி.என்.சேஷன். அன்று நள்ளிரவிலேயே ஜனாதிபதி மாளிகைக்கு வேகமாக வந்தார். அங்கு, ஜனாதிபதியுடன் நானும், ஜனாதிபதியின் செயலர் பி.முராரியும் இருந்தோம். 12 அடி தொலைவில் இருந்தபடியே, அவசரமாகவும், கிசுகிசுப்பாகவும், கண்களை விரித்தபடியும் சேஷன் பேசத் துவங்கினார். 'லோக்சபா தேர்தலை உடனே நிறுத்த வேண்டும்; நாட்டின் பாதுகாப்பை மிகக் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ், மிக விரைவாக கொண்டு வர வேண்டும் என, நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கும் மேலாக வேறு ஏதேனும் பங்காற்ற தயாராக இருக்கிறேன். 'உள்துறை அமைச்சருக்கு பொருத்தமாக இருப்பேன் என ஜனாதிபதி கருதினால், அமைச்சராகவும் என்னால் பணியாற்ற முடியும்' என சேஷன் கூறினார். ஆனால், அவரது ஆலோசனைகள் பரிசீலிக்கப்படவில்லை. சிறிது நேரத்திலேயே, அங்கு வந்த பிரதமர் சந்திரசேகர், மத்திய அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா ஆகியோர், 'பதற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'எந்த பீதியும் தேவையில்லை, தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை' என ஜனாதிபதியிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து, 'நிலைமையை முழுமையாக கையாளும் அரசின் தலைவரான பிரதமரே நம்பிக்கையுடன் இருக்கிறார். எந்தவொரு உள் மற்றும் வெளிவிவகாரங்களை அவர் எதிர்கொள்வார். இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது' என தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனிடம் ஜனாதிபதி வெங்கட்ராமன் கூறினார்.இதனால், லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவுகள் மட்டும் 1991ம் ஆண்டு ஜுன் 12, 15 தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல், ராஜிவ் கொலைக்கு முன்தினமான மே 20-ல் நடந்தது. இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஏப் 18, 2025 14:32

மத்திய இலாகா, காபினெட் செயலாளராக இருந்து ஆளும் பரம்பரை குடும்பத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு துணைபோன பின் திடீரென ஞானோதயம் வந்து தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரத்தையும் பிரயோகம் செய்தார். தேர்தல்புரட்சிசெய்தார். ஆனால் துணையாக இன்னும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டபோது தனது ஏகபோக அதிகாரம் பறிபோவதை எண்ணிக் கொதித்தெழுந்தார். நல்லது பாதி. தவறுகள் பாதி கலந்த ஆளவந்தான்.


Barakat Ali
ஏப் 18, 2025 12:39

தேசவிரோத சக்திகளுக்கு சிம்ம சொப்பனமா இருக்கணும் ன்னு நினைச்சவரு உள்துறை அமைச்சர் ஆகணும் ன்னு நினைக்காமே வேற என்ன நினைப்பார் ????


ஆரூர் ரங்
ஏப் 18, 2025 12:31

காங்கிரஸ் அடிமை அப்போது காங்கிரசின் அனுதாப அலையை பரப்ப வசதியாக தேர்தலை ஒத்திப் போட்டு உதவியது வரலாறு.


அப்பாவி
ஏப் 18, 2025 09:56

ஆசை யாரை விட்டது?


எஸ் எஸ்
ஏப் 18, 2025 07:02

இதை சேஷன் உயிரோடு இருந்த போது சொல்லி இருக்க வேண்டும். கேஸ் போட்டு இருப்பார்


c.mohanraj raj
ஏப் 18, 2025 01:17

நிச்சயம் உள்துறை அமைச்சர் ஆகி இருக்க வேண்டும் நாடு சிறப்பாக இருந்திருக்கும் ஊழல் செய்த எவனும் இருந்திருக்க மாட்டான்


Ray
ஏப் 18, 2025 07:26

இவரின் உள்துறை அமைச்சாகும் முயற்சி ஜனாதிபதி R வெங்கட்ராமனால் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது. ஜனாதிபதி தேர்தலிலும் K.R நாராயணிடம் தோற்றார். பின்னர் குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் நின்று தோற்றார். தேர்தல் கமிஷனைக் கலக்கிய இவர் தேர்தலில் வெல்ல முடியவில்லையென்பது வரலாறு.


கிஜன்
ஏப் 18, 2025 00:34

திஸ் இஸ் கால்டு பேக் டோர் பாலிசி ..... கொல்லைப்புற வழி


தேச நேசன்
ஏப் 17, 2025 23:52

ஐயா அன்று உள்துறை அமைச்சர் ஆகியிருந்தால், இன்றைக்கு டீம்கா இருந்திருக்காது


r ravichandran
ஏப் 17, 2025 23:37

ஒருவர் இறந்த பிறகு , அவர் இப்படி சொன்னார், அப்படி சொன்னார் என்று எழுதுவது என்பதெல்லாம் ஏற்று கொள்ளும் அளவிற்கு இல்லை. இறந்தவர் வந்து இதை மறுக்க போகிறாரா?


மீனவ நண்பன்
ஏப் 18, 2025 01:22

பெரியார் மற்றும் கலைஞரை மனதில் வைத்துக்கொண்டு சொன்னீர்களா


புதிய வீடியோ