உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்நிய செலாவணி கையிருப்பில் புதிய உச்சம் தொட்டது இந்தியா!

அந்நிய செலாவணி கையிருப்பில் புதிய உச்சம் தொட்டது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அந்நிய செலாவணி கையிருப்பு முதல்முறையாக 700 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 7 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த வாரம் 692.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு, இந்த வார வர்த்தக முடிவில் 704.885 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 12.588 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்துள்ளது. இதுவே ஒரே வாரத்தில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வாகும். இதன்மூலம் முதல்முறையாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, 700 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது. அதோடு, சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலகளவில் 4வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல, டாலர் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பும் அதிகரித்துள்ளது. தங்கம் கையிருப்பும் 2.184 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்துள்ளது. 'இந்த நிலை தொடர்ந்தால் 2026 மார்ச்சுக்குள் அந்திய செலாவணி கையிருப்பு 745 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், உலகநாடுகளில் நிலவும் அசாதாரண சூழல்களாலும், சர்வதேச சந்தைகளில் ஏற்படும் அபாயங்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் வலுப்பெற்றே இருக்க முடியும்,' எனக் கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !