உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் எம்.பி.,க்களுக்கு புதிய குடியிருப்புகள் திறப்பு

டில்லியில் எம்.பி.,க்களுக்கு புதிய குடியிருப்புகள் திறப்பு

புதுடில்லி: டில்லியில், எம்.பி.,க்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பை நேற்று திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அவரவர் பண்டிகைகளை குடியிருப்புகளில் கொண்டாடும்படி, எம்.பி.,க்களை கேட்டுக் கொண்டார். தலைநகர் டில்லியில், பார்லி., வளாகத்திற்கு அருகே உள்ள பாபா கரக் சிங் மார்க்கில், எம்.பி.,க்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். ஒவ்வொரு குடியிருப்பும், 5,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள நான்கு குடியிருப்பு டவர்களுக்கு, நாட்டின் நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: பழைய குடியிருப்புகளில் ஏராளமான பிரச்னைகளை எம்.பி.,க்கள் எதிர்கொண்டனர். ஆனால், இந்த புதிய குடியிருப்பில் அவர்களுக்கு எந்த அசவுகரியமும் இருக்காது. அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள் தங்குவர். இது, 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்பதை அடையாளப்படுத்தும். மேலும் எம்.பி.,க்கள், அவரவர் பண்டிகைகளை குடியிருப்பு வளாகத்திலேயே கொண்டாட வேண்டும். அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை