உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய யோஜனா திட்டத்திற்கு, இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:இந்த திட்டம், 2025-26 முதல் 6 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு ரூ.24,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.முதற்கட்டமாக நாட்டின் 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம்.2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. விவசாய உற்பத்தித்திறன், பயிர் பல்வகைப்படுத்தல், நீர்ப்பாசனம் மற்றும் கடன் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த, 11 அமைச்சகங்களின் 36 திட்டங்களை ஒன்றிணைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் அடர்த்தி மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது ஒரு மாவட்டமாவது தேர்ந்தெடுக்கப்படும்.மாநிலத் திட்டங்கள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டம் நாடு முழுவதும் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.அதே நேரத்தில் கள வருகைகள், மதிப்பாய்வுகள் மற்றும் கண்காணிப்புக்காக மத்திய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.n. Dhasarathan
ஜூலை 16, 2025 21:29

இன்னும் திட்டத்தில் தான் இருக்கிறார்கள் எப்போ சாதனை ? ஏற்கனவே 12 வருடங்கள் முடிந்துவிட்டது, நதி நீர் இணைப்பு, கருப்பு பணம் பிடித்தல், 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு எல்லாமே கனவுதானா ? என்னதான் பண்ணினீர்கள் ? இதே விவசாயிகளை இரண்டு வருடமாக டெல்லியில் போராடவிட்டு வேடிக்கை பார்த்தவர் தானே நீங்கள் ? ஒருமுறை கூட எட்டி பார்க்காதவர், இப்போ நாடகம் போடுவது மக்களுக்கு தெளிவாக திரியும், தூக்கி அடிப்பார்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2025 19:37

சூப்பர் திட்டம். கடந்த ஐந்தாண்டில், பத்து சதவீத பொருளாதார வளர்ச்சியால், இந்தியர்களின் சம்பளம் ஒன்றரை மடங்கு ஏறிவிட்டது.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 16, 2025 19:07

சூப்பர்


புதிய வீடியோ