உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடையின்றி போன் பேச வருகிறது புதிய சேவை

தடையின்றி போன் பேச வருகிறது புதிய சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ' பயனாளர்கள் தங்கள் நிறுவன சேவை இல்லாத இடங்களில், 'இன்டர்நெட்' மற்றும் குரல் அழைப்புகளுக்கு மற்ற நிறுவனங்களின், 'டவர்'களை பயன்படுத்தும் சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது.மொபைல் போன் இணைப்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கென பிரத்யேகமான டவர்களை வைத்துள்ளன. குறிப்பிட்ட இடத்தில் ஒரு நிறுவனத்தின் டவர் பலவீனமாக இருக்கும்போது, அழைப்புகளில் தடங்கல் ஏற்படுகிறது.இந்த நிலைமையை சரிசெய்ய ஐ.சி.ஆர்., எனப்படும், 'இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்' சேவையை தொலை தொடர்புத்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது. இதற்காக, டி.என்.பி., எனப்படும், 'டிஜிட்டல் பாரத் நிதி' என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, 27,836 இடங்களில் புதிய மொபைல் போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த டவர்களில், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவையை பகிர்ந்து கொள்ள உள்ளன.இந்த மூன்று சேவைகளில் ஒன்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், டவர் கிடைக்காத இடங்களில் இந்த மூன்றில் ஒரு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி 4ஜி மற்றும் குரல் அழைப்பு சேவைகளை தடையின்றி பயன்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Natarajan Sankaragopal
ஜன 22, 2025 21:49

பிஎஸ்என்எல் 4g கிடைக்கவில்லை


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 21, 2025 09:18

டவர் சரி செய்வதுடன் பெஞ்சை தேய்க்கும் அதிகாரிகளையும் மாற்ற வேண்டும். அப்போதுதான் பிஎஸ்என்எல் வளர்ச்சி பெறும்


Antony Melban
ஜன 21, 2025 09:32

எல்லாவற்றையும் தனியாருக்கு இலவசமாக தாரை வார்ப்பதற்கு தாங்கள் ஆதரவா ஐயா?


Kasimani Baskaran
ஜன 21, 2025 07:35

அருமை.. இரண்டு அல்லது மூன்று சிம்கார்டுகள் வாங்கவேண்டிய அவசியம் இல்லை.


Karthik
ஜன 21, 2025 07:26

நல்ல முயற்சிதான்.. அதையும் பார்ப்போம்.


Kalyanaraman
ஜன 21, 2025 06:22

மாநகரங்களில் நகரங்களில் பிஎஸ்என்எல் வளரவும், கிராமப் புரங்களில் பிஎஸ்என்எல் ஏர்டெல் வளரவும் இது உதவும்.