ஏர்செல் - மேக்சிஸ் ஊழல் வழக்கில் புதிதாக சம்மன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:'ஏர்செல் - மேக்சிஸ்' ஊழல் வழக்கில், மலேஷிய தொலைதொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் அதன் முன்னாள் இயக்குநர் அகஸ்டஸ் ரால்புக்கு புதிதாக 'சம்மன்' அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக, காங்கிரசைச் சேர்ந்த சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனம், 3,560 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. அப்போது சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும், இதன் மூலம் அவரது மகன் கார்த்தியின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ., கோரியபடி, மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் இயக்குநர் அகஸ்டஸ் ரால்புக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.