உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மறுபடியும் முதலில் இருந்தா...! 27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா

மறுபடியும் முதலில் இருந்தா...! 27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உலகின் 27 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கொரோனா தாக்கம்

கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை துவம்சம் செய்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டியது. இன்றளவும் ஒரு சில நாடுகளில் கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

27 நாடுகள்

இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது. கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.

புதிய அலை

அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியில் தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3 கண்டங்களில் 27 நாடுகளில் பரவி உள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அறிகுறிகள்

மனித உடலில் xec கொரோனா திரிபு தாக்கினால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்ற வகை கொரோனா பாதிப்பின் போது ஏற்படும் காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும். புதிய வகை கொரோனா திரிபின் தன்மையை, செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sridhar
செப் 18, 2024 19:30

திமுகவை விடவா கொடிய வியாதி .


சிவா அருவங்காடு
செப் 18, 2024 15:49

மது கடை கிடையாது. மருத்துவ செலவு கிடையாது. பெட்டி கடைகள் அடைத்தால் பீடி சிகரெட் கிடையாது. ஆகவே கொரோனா வருக.


R S BALA
செப் 18, 2024 13:16

வடிவேலு காமெடி தான் ஞாபகத்துக்கு வருது... இனி செத்து செத்து விளையாடலாம் உலக மக்கள்


ArGu
செப் 18, 2024 12:51

waiting


vadivelu
செப் 18, 2024 12:36

நல்ல நேரம், ஆட்சி மாறாமல் இருக்கு.தப்பித்தோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை