செய்திகள் சில வரிகளில்
100 பக்தர்கள் தப்பினர்
ராம்நகர், கனகபுரா தாலுகா, சிவசங்கரேஸ்வரர் கோவிலுக்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் அரசு பஸ் சென்றது. சாத்தனுார் சங்கம் காட் பிரிவில் உள்ள பாதையில் பஸ் சென்றபோது, திடீரென பிரேக் பழுதானது. ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலைப்பாதையில் தறிகெட்டு ஓடியது, சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர், பஸ்சை ஒரு பாறை மீது மோதி, அனைத்து பயணியர் உயிரையும் காப்பாற்றினார். அதிகாரி கார் மீது தாக்கு
பெங்களூரு ரூரல், நெலமங்களாவை சேர்ந்த தொழிலதிபர் மகன் ரவிகவுடா குடிபோதையில் காரை ஓட்டினார். எதிர்திசையில் வந்த குனிகல் தாசில்தார் ரஷ்மியின் காரை வழிமறித்து தாக்கினார். தாசில்தார் போலீசில் புகார் செய்தார். ரவிகவுடாவை கைது செய்து, காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.