வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஐயா, தஞ்சாவூர் பிரகதீசுவரர் ஆலயம் புவியீர்ப்பு விசையினால் கட்டப்பட்டது
ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து போகும் என்ற மூட நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது செய்திகள் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
அப்போ எதுக்கு ஐ.ஐ.டி, என்.ஐ.டி எல்லாம்? எல்லோரையும் வேத பாடசாலைகளில் சேர்த்துடலாம். வேதத்தில் இல்லாதது ஒண்ணும் இல்லை.
இப்படி ஏதாவது உளறவில்லை என்றால்தான் ஆச்சர்யமே
வேதங்களில், உபநிஷத்துக்களில் இல்லாத விஞ்ஞானம் இதுவரை கிடையாது, இன்னும் வரப்போவது கிடையாது. ஆனால் பல ஆய்வு நூல்கள் மாக்ஸ் முல்லர் காலத்துக்கு முன்னரே திருடப்பட்டு விட்டன. வெள்ளைக்காரர்கள் நிறைய திருடி பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் வைக்கப்பட்டது. கிரகங்களின் நிலை இன்னும் கூட இந்திய முறைப்படி துல்லியமாக கணிக்கப்படுகிறது. காலக்கோட்பாடுகள் போன்றவை வெகுவாக விளக்கப்பட்டுள்ளது. சிக்கலான டிஎஸ்பி தொழில் நுணுக்கத்தில் கூட வேத கணிதம் உபயோகப்படுத்தப்படுகிறது.
என்னாது? வேதங்களை எல்காம் திருடிக்குட்டு போயிட்டாங்கள்ச? இப்போ இங்கே இருக்கறதெல்லாம் வேதம் இல்லியா? அதைப் படிச்சுட்டுதான் அமிச்சர் இப்பிடி உளறுறாரா?
இது உண்மை என்றால் வேதங்களில் இன்னும் பல அறிவியல் கருத்துக்கள் இருக்கின்றன என்றே எடுத்துக்கொள்ளலாம். அப்படியானால் வேதங்களை தீவிரமாக ஆராய்ந்து புது அறிவியல் விதிகளை அறிவிக்கலாமே? நான் வேத சாஸ்திரங்களின் எதிரி இல்லை. அதே சமயம் இத்தகைய மேம்போக்கான கருத்துக்கள் எந்த பயனையும் தர போவதில்லை
பிஜேபியில எல்லாருமே பைத்திய காரண இருக்கார்கள்
அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற புள்ளைக்கு எம்புட்டு அறிவு பாருங்கள்.
ரிக், யஜூர் சாம வேதங்கள் வாழ்க்கை நெறி முறைகளை தெரிவிக்கிறது. சுருக்கமாக சொன்னால் இக்கால சட்டங்கள் போல். அதர்வண வேதம் மந்திர தந்திர மந்திரிகங்கள் கொண்டவை. இந்த வேதத்தில் உள்ள சில மந்திரங்களை முறையாக உபயோகித்தால், கூடு விட்டு கூடு பாயும் சக்தியையும் பெறலாம். இதில் உள்ள ஒரு பகுதி ஆயுர்வேதம் மருத்துவ கலை பற்றியது. சாம வேதத்தில் உள்ளது கந்தர்வவேதம் நாட்டிய கலை, சப்த ஸ்வரங்கள் பற்றியது. ரிக் வேதத்தின் ஒரு பிரிவு தனுர் வேதம், சண்டை கலை பற்றியது. இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம். அறிவியல், கணிதம், தாதுகள் உலோகங்கள், அணு ஆயுத பற்றிய அனைத்தும் மேலே சொன்ன நான்கு வேதத்தினுள் அடங்கும். சந்தேகம் இருந்தால் கூகிள் செய்து பாருங்கள்.
மனிதனின் அறிவு வளர வளரத்தான் விஞ்ஞானம் வளர்கிறது. அடுத்தவனைக் கண்டு பொறாமைப் படாமல், புதிய விஞ்ஞான அறிவை நாம் கண்டு பிடிக்கணும். பிரிட்டிஷ்காரன் டயத்தில்தான் சி.வி.ராமனும், போசும் நோபல் பரிசு பெற்றனர். ராமானுஜம் இங்கிலாந்து போய் புகழ் பெற்றார். அரசியல் டுபாக்கூர்களை நம்பாதீர்கள்.
இதை இவர் கூறும் முன்பே நானும் படித்திருக்கிறேன் ..... ஒரு எளிய உதாரணம், இன்றும் கூட விஞ்ஞானிகளால் சூரிய, சந்திர கிரகங்களின் சரியான நேரத்தை ஒரு வாரம் முன்புதான் கணிக்க முடிகிறது ... பஞ்சாங்கங்களில் அவை பல மாதங்களுக்கு முன்பே கணித்து, அச்சில் வந்துவிடுகின்றன .... பஞ்சாங்கம் தயாரிப்பவர்கள் பலர் பிராம்மணர்கள் கூட இல்லை .... கிரகண நேரங்களில் நம்மில் பலர் உணவுப் பண்டங்களில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கிறோம் .... அதற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு .... நமது கண்டுபிடிப்புக்கள் அல்லது ஆய்வுகள் தொடரா வண்ணம் இயற்கைக் சீற்றம், விண்கல் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள் ....
விஞ்ஞானிகள் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு கிரக நிலவரம் போட்டு வெச்சிருக்காங்க. பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களை கேட்டலாக் போட்டு வெச்சிருக்காங்க.
அப்பாவி.. இருக்கலாம்.. விஞ்ஞானத்தையும் மீறியவை இயற்கை நிகழ்வுகள்.. ஈர்ப்பு விசை குறைவதால் பல துணைக்கோள்கள், பிரதான கோள்களை விட்டு சிறிது சிறிதாக விளங்குவதாகவும், நட்சத்திரங்களின் ஆயுளை சரியாகக் கணிக்க முடியாது என்றும் அவர்களே சொல்கிறார்கள்.. நான் சிறுவயதில் பார்த்த பவுர்ணமி முழுநிலவின் அளவு இப்போது இல்லையென உணர்கிறேன் ....