உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த குண்டு வீசியது காங்கிரஸ்: ரூ.2.95 கோடி பெற்றதாக செபி தலைவர் மீது திடுக்

அடுத்த குண்டு வீசியது காங்கிரஸ்: ரூ.2.95 கோடி பெற்றதாக செபி தலைவர் மீது திடுக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செபி தலைவர் மாதவி புச், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து, கன்சல்டன்சி என்ற பெயரில் 2.95 கோடி ரூபாய் வாங்கினார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.மும்பை பங்குச்சந்தையின் தலைவராக இருப்பவர் மாதவி புச். இவர் மீது காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது:செபி தலைவர் மாதவி, 2016 முதல் 2024 வரையிலான காலத்தில் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து 2.95 கோடி ரூபாய் பெற்றுள்ளார். அவரது ஆலோசகர் நிறுவனமான அகோரா அட்வைசரி நிறுவனம் மூலம் இந்த தொகை பெறப்பட்டுள்ளது.இந்த நிறுவனம் முடங்கி விட்டது என்று மாதவி கூறியுள்ளார். அது தவறு. அந்த நிறுவனம் செயல்படுகிறது. நிதியும் பெற்றுள்ளது. அதில் மாதவிக்கு 99 சதவீதம் பங்குகள் உள்ளன.மஹிந்திரா தவிர, டாக்டர் ரெட்டிஸ், பிடிலைட், ஐ.சி.ஐ.சி.ஐ., செம்ப்கார்ப், விசு லீசிங் உள்ளிட்ட நிறுவனங்கள், மாதவியின் அகோரா நிறுவன சேவையை பெற்றுள்ளன.கடந்த மாதம், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இரட்டைப்பதவி வகித்ததன் மூலம், 16.80 கோடி ரூபாய் மாதவி லாபம் அடைந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது; அதை வங்கியே மறுத்த நிலையில், இன்று மற்றொரு புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 10, 2024 23:20

எந்த குண்டு வீசினாலும் மாதவியை காப்பற்ற மோடிஜி கவச் மாதிரி கச்சென்று வந்து நிற்பார்.


T.sthivinayagam
செப் 10, 2024 20:07

அந்த ஆண்டவனே வந்து சொன்னால் தான் செபியின் சூட்சும்ம் புரியும் என்று ஷேர்ஹோல்டர்கள் கூறுகின்றனர்


தாமரை மலர்கிறது
செப் 10, 2024 19:27

மாதவி புச் சிறந்த தேசப்பற்றாளர். தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. பொய் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸ் செய்யும் சதிவேலை.


Bavithra
செப் 11, 2024 00:14

உண்மை ..இந்த மாதவி காங்கிரஸ் செய்த ஷேர் மார்க்கெட் திருட்டுகளை கண்டு விட்டார் .


M Ramachandran
செப் 10, 2024 19:11

ஐந்தாம் கூலி படை அரசியல் வேடத்தில் நாட்டைய்ய கெடுக்க வேலை செய்கிறது. அதற்க்கு உதாரணம் மக்களெ அதுவும் திருப்பூர் மற்றும் கோவை மக்களெ மிக உஷார். ஒரு வீண போனாவன் பொட்டா சமூகத்திலிருந்து பெண்களை வங்க தேசத்திலிருந்து சிஸ்டமேடிக்காக மம்தா தயவால் பாரதத்தில் ஊடுருவி பெயராய் ஹிந்து பெயராக ஆதார் கார்டில் மாற்றி ஊடுருவி பின்னலாடை நிறுவனர்களில் புகுந்து இந்தியாவிற்குள் ஊடுருவுமுன் தமிழ் மொழியையும் தீவிராவாத இயக்கம் கற்று அனுப்பி உள்ளத்தாக தகவல் . அவர்கள் ஹிந்துக்கள் பெயர் போர்வயில் நுழைந்துள்ளார். ஆண் மக்கள்ளை காவல் துறை கைய்யலியை ஆடையின்றி கழட்டி செக் செய்யணும். 3/4 ஆக இருந்து இந்து பெயரில் ஒளிந்திருந்தால் நொங்கு எடுக்கணும் இப்போது வந்திருக்கு இந்த செய்தி இதை அசாம் முதல்வர் உறுதி படுத்தி நம் தம் தமிழ் நாட்டு முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். UP. ரயில் கவிழ்ப்பு போல் இங்கு செய்ய உள்ளார்கள். திருப்பூரிலுள்ள கோவையிலுள்ள மக்களெ உஷார்.


ஆரூர் ரங்
செப் 10, 2024 18:16

நேஷனல் ஹெரால்ட், பிரிட்டிஷ் குடியுரிமை வழக்குகளை விரைவில் முடிக்க ராகுல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாமே. ஏற்கனவே இரண்டாண்டு சிறை தண்டனை பெற்றவரை பிரதமராக ஆக்குவோம் என்று உழைக்கும் குடும்ப கார்பரேட் கட்சி மற்றவர்களைக் குறைகூறத் தகுதியற்றது.


GMM
செப் 10, 2024 17:06

ஒருவர் பற்றி பொது வெளியில் குற்றச்சாட்டு கூறிய பின் நிரூபிக்கும் வரை 2.95 கோடி காங்கிரஸ் டெபாசிட் செய்ய வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு என்றால் கட்சி 5 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும். கூறியவர் உடன் கைது செய்து, பாதிக்கப்பட்ட நபர் கூறும் தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் . பங்கு சந்தையை குழப்ப காங்கிரஸ் முயல்கிறது ?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 10, 2024 23:19

1,76,000 கோடியை முதலில் டெப்பாசிட் செய், அப்புறம் புரளியை கிளப்புன்னு அன்று சொல்லியிருந்தால் இன்றைக்கு பாதாளத்திற்கு போய் ஒளிந்து கொண்டிருப்பார்கள் சங்கிகள்.


RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2024 02:31

1,76,000 கோடியை முதலில் டெப்பாசிட் செய், ,,,, தம்பி . சூதானமா இருக்கணும் ... தற்குறின்னு புரூப் பண்ணக்கூடாது .... சி ஏ ஜி அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயம் அது .... பாஜக கண்டுபுடிச்சது இல்ல ... ஊழல் நடக்கலைன்னா உச்சம் பல லைசென்சுகளை ரத்து பண்ண வெச்சது ஏன் ???? ஊழல் நடந்தது எப்படி ன்னு எழுதினாலும் கொத்தடிமைகளுக்கு புரியப்போறதில்ல ... புரிஞ்சாலும் ஒப்புத்துக்க மாட்டீங்க ....


satheshkumar
செப் 10, 2024 17:01

இவனுங்களுக்கு வேற வேலை இல்ல..கப்சா காங்கிரஸ்


Nandakumar Naidu.
செப் 10, 2024 16:51

காங்கிரஸ் ஒரு கேடுகெட்ட கட்சி. முற்றிலும் நிரந்தரமாக மண்ணோடு மண்ணாக அழிக்க பட வேண்டிய ஒன்று. பொய்யிலே ஊறிப்போன சாக்கடை.


Balasubramanian
செப் 10, 2024 16:30

இதனால் தான் கற்றவர்கள் மற்றும் ஆளுமைத்திறன் உள்ளவர்கள் வெளிநாடு செல்கின்றனர் போலும்! எங்கும் எதிலும் அரசியல்! எவ்வளவு மன அழுத்தத்துடன் பணி செய்ய வேண்டிய நிலை பாரதத்தில்


Barakat Ali
செப் 10, 2024 16:02

மாதபியை எதிர்த்து நீதிமன்றமே போகலாமே ???? ஓ, ஆதாரங்கள் இல்லாமல் கல்லெறிந்துதான் பழக்கமோ ????


முக்கிய வீடியோ