வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சன்னகிரி எம் எல் ஏ பசவராஜூ சிவகங்கா கூறியதில் என்ன தவறு?
பெங்களூரு: கர்நாடகாவில் துணை முதல்வராக உள்ள டி கே சிவகுமார் அடுத்த முதல்வர் ஆவார் என்று சர்ச்சையாக பேசிய எம் எல் ஏ பசவராஜூ சிவகங்காவுக்கு காங்கிரஸ் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று காரணம் காட்டும் நோட்டீஸ் அனுப்பியது.கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி கே சிவகுமாரும் இருந்து வருகின்றனர். சித்தாரமையா 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார் என்றும் துணை முதல்வர் சிவகுமார் அடுத்து முதல்வர் ஆவார் என்றும் அடிக்கடி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், சன்னகிரி எம் எல் ஏ பசவராஜூ சிவகங்கா, தாவங்கேரில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியின்போது, துணை முதல்வர் டி கே சிவகுமார் அடுத்த முதல்வர் ஆவார் என்று கூறியது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிவேதித் ஆல்வா வெளியிட்டு அறிக்கை:முதல்வர் மாற்றம் தொடர்பாக சிவகங்கா ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார், இது கட்சிக்குள் குழப்பத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த பொது அறிக்கைகள் கட்சியை சங்கடப்படுத்தியது மட்டுமல்லாமல், கட்சி ஒழுக்கத்தை மீறுவதாகவும் உள்ளன. இந்த ஒழுக்கக்கேடான கருத்துக்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு,காரணம் காட்டும் நோட்டீஸை அவருக்கு அனுப்பி இருக்கிறோம்.இந்த அறிவிப்பைப் பெற்ற ஏழு நாட்களுக்குள் பசவராஜூ சிவகங்கா, தான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நிவேதித் ஆல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சன்னகிரி எம் எல் ஏ பசவராஜூ சிவகங்கா கூறியதில் என்ன தவறு?