உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது

ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக பொறுப்பேற்றதும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், ஜூன் 22ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும் வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் ஆவார். அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். கடைசியாக 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ல் நடைபெற்றது. அதன்பிறகு, லோக்சபா தேர்தலுக்கு பிறகே அடுத்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும், நிதியமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்த நிலையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புதுடில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sangarapandi
ஜூன் 14, 2024 13:41

நிதியமைச்சர் அவர்கள் தலைமையில் நடை பெறயுள்ள ஜி .எஸ் .டி. கவுன்சில் கூட்டத்தில் முதல் பணியாக சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை 10% சதவீகிதத்திற்கும் குறைவாக நிர் ணயம் செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் இழப்பை சரி செய்ய சிறந்த வழி முறைகளை நிபுணர் குழு அமைத்து பொது மக்களின் கருத்துக்களை கேட்டு , பரிசீலனை செய்து நடை முறை படுத்த வேண்டும். தற்போது வரிகளை குறைத்து மக்களுக்கு வசதிகளை கொடுக்கின்ற செயல் திறன் மிக்க அரசே தேவை. அதை விடுத்து வரிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் தேவையற்றதாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டுகிறேன்.


venugopal s
ஜூன் 13, 2024 20:58

ஜி எஸ் டி வரி போட இன்னும் ஏதாவது பாக்கி உள்ளதா என்று ஆராயப் போகிறார்கள்!


காசுலிங்கம்
ஜூன் 13, 2024 19:07

போன் நம்பர் வெச்சுக்க காசு தரணுமாம். உங்க பங்குக்கு ரோடில் நடந்தா காசு, பேசுனா காசுன்னு உருவுங்க....


பாண்டுரெங்கன்
ஜூன் 13, 2024 19:05

மறுபடியும் அமைச்சராயாச்சு. அரசு செலவில் அடிக்கடி பயணம் போகலாம். தேர்தலுக்கு டிபாசிட் கட்டவே காசு இல்லாதவர்.


R Dhasarathan
ஜூன் 13, 2024 16:04

வயிற்றில் புளியை கரைக்கிறது. புதுசா ஏதேனும் வரி போடுவார்களோ அல்லது வரி ஏற்றம் செய்வார்களோ என்று


vadivelu
ஜூன் 13, 2024 17:15

பயம் வேண்டாம், எப்போதுமே எல்ல பண்டங்களுக்கு வரி இருந்துதான் வருகிறது. மாநில அரசு மின்சாரம் உபயோகத்திற்கு கட்டணம் ஏற்றுதல், , வீட்து வரி , குடி தண்ணீருக்கு வரி, பெட்ரோல் டீசலுக்கு வரி , பத்திர பதிவுக்கு கட்டணம், அரிசி , பருப்பு விலை ஏற்றம் , கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் ... செய்யாமல் இருந்தாலே போதும், உங்கள் வயிற்றில் புளி கரையாது.


இறைவி
ஜூன் 13, 2024 15:59

GSTக்கு முன் இறக்குமதி வரி, கலால் வரி, மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி என்று முப்பது சதத்திற்கும் மேலாக வரி இருந்தது. இதில் பெரும்பகுதி, மாநில வாரியாக இருந்தது. அப்போது சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் என்று யாரும் பில் போடாமல், வரி கட்டாமல் சமாளித்தார்கள். அல்லது பெயருக்கு சிறு வரி செலுத்தினார்கள். இன்று வியாபாரிகள் அல்லது தொழில் நிறுவனத்தினர் வாங்கும் பொருளின் GSTயை முழுமையாக திரும்பப் பெற அவர்களின் விற்பனைக்கு GST பில் போட்டால்தான் முடியும். அதை மறைக்க சிறு குறு தொழில்கள் நசுக்கப் படுகிறது என்று பொய்யான புலம்பல். இன்றும் GSTயில் வருடத்திற்கு நாற்பது லட்ச ரூபாய்க்கு குறைவாக வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு GSTயிலிருந்து விலக்கு உண்டு. GSTயால் கஷ்டப்படும் வியாபாரிகள் யாராவது சொந்தமாக பல லட்ச ரூபாய்க்கு வீடு வாங்காமல் இருக்கிறார்களா? மௌரிய சாணக்கியர் காலத்திலிருந்தே அரசுக்கு வருமானத்தில் பதினாறு சதம் வரி கட்ட வேண்டும்


R Dhasarathan
ஜூன் 13, 2024 22:12

நகை கடையில் ஒரு கிராம் தங்கம் வாங்கினேன், எங்களது ஜிஎஸ்டி நம்பர் போட்டு வேண்டும் என்று கேட்டேன் சண்டைக்கு வந்து விட்டார்கள்.... இப்படி தான் அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.. இதை போல் கண்டறிந்து சரி செய்தாலே போதும் ஒரளவு கட்டுக்குள் வரும் விலை ஏற்றம் ...


KRISHNAN R
ஜூன் 13, 2024 15:30

சாமானியன்...வர்கம் பயன்படுத்தும்... அனைத்து பொருட்களுக்கும்.... ஜி. எஸ் டி....... என்ன செய்வது


Naranam
ஜூன் 13, 2024 15:30

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜீ எஸ் டி க்குள் கொண்டு வரலாமே? மத்திய மாநில அரசுகளுக்கு திராணி இருக்கா ?


R Dhasarathan
ஜூன் 13, 2024 15:01

அழுகிறோம் இந்த ஜிஎஸ்டி யால். சிறு தொழில் செய்பவர்கள் மிகவும் துன்பம் அனுபவிக்கிறோம். அரசால் எங்களுக்கு எந்த பலனுமில்லை.


Lion Drsekar
ஜூன் 13, 2024 14:45

பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கூட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும், சென்ற அங்கு அதிகாரிகள் அளவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நாந்தான் தமிழகத்தின் சார்பாக அம்பத்தூரில் சிறுதொழில் அலுவலகத்தில் பொறுப்பாளராக இருந்து ஏற்ப்பாடு செய்தேன் . கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்கள் குறைகளை கூற தலைமை ஏற்று நடத்த வந்த ஆந்திர மொழி பேசும் அதிகாரி கலந்து கொண்டு எல்லாவற்றிக்கும் எளிய முறையில் உடனுக்குடன் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பதாக கூறினார் . அதற்காக எல்லா அதிகாரிகள், தொழில் அதிபர்கள் அனைவருக்கும் வாட்சப்பில் குரூப் ஆரம்பிப்போம், என்றெல்லாம் கூறினார் .....? அன்று கேட்பதற்கு நன்றாக இருந்தது ஆனால் திரு பாலசந்தர் படம் தண்ணீர் தண்ணீர் போல் ஆகிவிட்டது . இதன் விளைவுதான் சுய தொழில் புரிவோறுக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது. அடிமட்டத்தில் இருப்பவர்களை முதலில் அழைத்து அவர்களின் பிரச்சனைகளை உண்மையாக தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்ப செயல்பாட்டால் நன்றாக இருக்கும். வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி