உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலில் அடுத்த வாரிசு!

அரசியலில் அடுத்த வாரிசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் விரைவில் தேர்தல் அரசியலில் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. பீஹார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள நிறுவனருமான நிதிஷ்குமார் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர். இவரின் மகன் நிஷாந்த் குமார் பீஹார் அரசியல் களத்தில் அடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பீஹார் மாநில மக்கள் தமது தந்தை நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கட்சி சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற நிஷாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்னா அருகே உள்ள பக்தியார்பூரில் தமது தாத்தாவும், சுதந்திர போராட்ட தியாகியுமான ராம்லக்கன் சிங் வைத்யாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நிஷாந்த் குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது; எனது தந்தையின் தலைமையில் பீஹார் மாநிலம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. ஆகையால் எனது தந்தைக்கும், கட்சிக்கும் மக்கள் ஓட்டளித்து மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அவரிடம், அரசியலில் நுழையும் எண்ணம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் சிரித்தபடியே அங்கிருந்து சென்றுவிட்டார் நிஷாந்த்.எனினும், தந்தையை பின்பற்றி வரப்போகும் பீஹார் சட்டசபை தேர்தலில், நிஷாந்த் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mohan
ஜன 21, 2025 19:55

ஐயா,பின்பாட்டு பாடும் பொய்பெயர் வைகுண்டம், திமுக வாரிசு அரசியல் செய்யலைன்னு சொல்ல முடியாம ஒண்ணாங்கிளாஸ் பையன் மாதிரி ""நீ மட்டும் ஒழுங்கா??ன்னு கேட்க மட்டுமே தெரியுது நல்ல உ.பி


Indian
ஜன 18, 2025 17:11

வாரிசு அரசியலை வைத்து இனி பாஜகாவால் பிலிம் காட்டமுடியாது


Thirumal Kumaresan
ஜன 18, 2025 16:56

டவ்வளவு நாள் எங்கே இருந்தான் என்றே தெரியாது அரசியல் நாதாரிகள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 18, 2025 13:28

இப்போதைய ஒன்றிய அரசில் இருக்கும் 28 அமைச்சர்கள் வாரிசுகள். 78 பாஜக MP க்கள் வாரிசுகள் தான். "குடும்ப கட்சி " என்கிற வாதம் ஊசிப்போன உப்புமா. வாரிசு அரசியல் என்கிற வாதம் ஊசிப்போன வடா. எதிரிக் கட்சிகள் வேற ஏதாவது ட்ரை பண்ண வேண்டும்.


Kumar Kumzi
ஜன 18, 2025 15:41

அடுத்து இன்பநிதி நைனாவுக்கும் நீ தான் சலூட் அடிக்கணும் கொத்தடிமை கூமுட்ட ...


xyzabc
ஜன 18, 2025 12:41

திராவிட மாடல்


T.sthivinayagam
ஜன 18, 2025 11:01

வாரிசு அரசியலை வைத்து இனி பாஜகாவால் பிலிம் காட்டமுடியாது


Kumar Kumzi
ஜன 18, 2025 15:44

அடுத்து இன்பநிதி நைனா வருவார் அவனுக்கும் ஓசிகோட்டர் கொத்தடிமைங்க தூசி தட்டி சலூட் அடிக்கணும் ஹீஹீஹீ


M. PALANIAPPAN
ஜன 18, 2025 09:59

வாரிசு அரசியல் வாழக வளமுடன்


ஆரூர் ரங்
ஜன 18, 2025 09:37

பொதுவாக மூத்த அரசியல்வாதிகளின் (நல்ல தகுதி இருந்தாலும்) உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு தர தனியார் நிறுவனங்கள் மிகவும் தயங்குகின்றன. அன்னிய நாடுகளிலும் வேலைகிடைக்காவிட்டால் அவர்கள் வேறுவழியின்றி பிழைப்புக்கு அரசியலுக்கு வருகின்றனர். வாரிசே இல்லாத தலைவர்கள் தேவலாமென்றால்( சசி போன்றவர்களின்) உறவுகள் உள்ளே வந்து அதிகாரமையமாகி விடுகின்றனர். நவீனக்கல்வி சேவை மனப்பான்மையை சிறிதும் வளர்ப்பதில்லை.


baala
ஜன 18, 2025 09:24

இல்லை நிச்சயமாக வாரிசு அரசியல் அல்ல.


முருகன்
ஜன 18, 2025 09:24

வாரிசு அரசியலை எதிர்க்கும் நல்லவர்கள் கருத்து இப்போ என்னவாக இருக்கும்?


சமீபத்திய செய்தி