வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிக்க மகிழ்ச்சி
பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேசினார். அப்போது, தன்னுடைய ராஜினாமா கடிதம் மற்றும் 17வது சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். அண்மையில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில் 202 இடங்களில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான மஹாகட்பந்தன் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, வரும் 20ம் தேதி பீஹாரின் காந்தி மைதானத்தில் நடக்கும் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில், முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். அவருடன் 34 அமைச்சர்கள் பதவியேற்க இருக்கின்றனர். பாஜவைச் சேர்ந்த 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 பேரும், லோக் ஜன்சக்தி கட்சியைச் சேர்ந்த மூவரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளின் சார்பில் தலா ஒருவரும் அமைச்சராக இடம்பெறுகின்றனர்.இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே, பீஹாரின் 18வது சட்டசபையை அமைக்கும் நடவடிக்கையாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 243 எம்எல்ஏக்களின் விபரங்களை கவர்னர் ஆரிப் முகமது கானிடம் தேர்தல் அதிகாரிகள் நேற்று வழங்கினர். இந்த நிலையில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேசினார். அப்போது, தன்னுடைய ராஜினாமா கடிதம் மற்றும் 17வது சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார்.
மிக்க மகிழ்ச்சி