உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத் துறையில் மாற்றத்தை கொண்டு வரும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத் துறையில் மாற்றத்தை கொண்டு வரும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'பீஹார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.பீஹார் மாநிலம் தர்பங்காவில் ரூ.12,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் பல கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். தர்பங்காவில் ரூ.1,260 கோடி மதிப்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் ரூ.5,070 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பீஹார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். எய்ம்ஸ் மருத்துவமனையால் மேற்குவங்கத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பலன் அடையும். எய்ம்ஸ் மருத்துவமனையால் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பீஹாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த பின், நிலைமை மேம்பட்டது. பீஹார் மாநிலம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்கள் நலனுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. எங்கள் அரசு எப்போதும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவே நிற்கிறது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவத் திட்டம் இல்லாவிட்டால், பலர் மருத்துவமனையை அணுக முடியாமல் அவதிப்பட்டு இருப்பார்கள். முந்தைய அரசுகள் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தன. பீஹாரில் முந்தைய அரசுகள் சுகாதார உள்கட்டமைப்பு குறித்து ஒருபோதும் கவலைப்படவில்லை. நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், எங்கள் அரசு நாட்டின் பல பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. இன்று நாட்டில் 24 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. ஒருவர் தாய்மொழியில் மருத்துவக் கல்வி பெற்று டாக்டர் ஆகலாம் என்று எங்கள் அரசு முடிவு செய்தது. முதல் கவனம் நோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2வது நோயை கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது. மூன்றாவது கவனம் மக்களுக்கு இலவச மற்றும் மலிவான சிகிச்சையைப் அளிக்க வேண்டும். நான்காவது கவனம் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதாகும். சுகாதார துறையில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mario
நவ 13, 2024 19:04

மதுரையிலுமா?


hari
நவ 13, 2024 23:25

லண்டனிலும் சில மூட்டுகள்


Duruvesan
நவ 13, 2024 17:01

மோடி சார் எப்போ தான் எலெக்ஷன் ட்ராமா முடியும்? டாலர் விலை வரலாறு காணாத ஏற்றம். மார்க்கெட் 22% correction, இது பொருளாதாரத்தில் இரக்கம் உண்டாக்கும், நானும் சங்கி தான், economist இல்லை, சிவில் என்ஜினீயர், விவாதிக்க தயார், சும்மா எப்போ பாரு ஹிந்து முஸ்லீம், ஹிந்துவுக்கு நீங்க ஒரு புல்லு கூட புடுங்கி போடல, நீங்க பண்ண ஒரே நல்லது நீட் அதுவும் காங்கிரஸ் கொண்டு வந்தது, எலெக்ஷன் PSU ஸ்டோக்ஸ் வாங்குங்க மேல போகுனீங்க எல்லாம் பொத்திகிச்சி, economy குஜராத்தி சொல்லி தர வேண்டாம், தமிழ் ஹிந்து எனக்கு intraday டே ல சம்பாதிக்க தெரியும், தயவு செய்து கீழ வந்து மக்களின் தேவை என்னன்னு பாருஙக


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 16:29

தமிழ் நாட்டு மக்கள் மறந்தாலும் பாஜக வே எய்ம்ஸ் ஸை நினைவு படுத்தி, தன் முகத்தில் தானே கரி பூசிக்கறது. தமிழ் நாட்டுக்கு எய்ம்ஸ் வரும்... ஆனா வராது...


hari
நவ 13, 2024 17:23

இங்கே கத்தி குத்து நடக்குது வைகுண்டம்... பலே பலே முட்டு


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 16:26

jay : அரசு அவ்வளவு பலவீனமானதா? அதன் திட்டங்களை வராமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு திமுக சக்தி வாய்ந்த கட்சியா? சூப்பர். சூப்பர். அப்புறம் என்ன கூந்தலுக்கு.... வேணாம் சென்சார் ல போயிடும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 16:22

sasikumar yadav: ஜார்க்கண்டில், மோடியும் அமித்ஷா வும் இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் நியூஸ் பார்க்கவில்லை யா? இப்படி கிணற்றுத் ____ யா இருக்கீங்களே. கஷ்டம்.


hari
நவ 13, 2024 17:26

கத்தி குத்து...முதல்வர் அதிர்ச்சி....என்ன வைகுண்டம். ...


Jay
நவ 13, 2024 15:33

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருகிறது மத்திய அரசு. பொதுவாக எந்த மத்திய அரசின் திட்டங்களும் வராமல் பார்த்து கொள்வதுதான் திமகாவின் கொள்கை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரெடியான பின்பும் எய்ம்ஸ் பெயர் கெடும் படி மாடல் பார்த்து கொள்ளும். மொக்கையான செய்திகளை பெரியதாக போடுவார்கள், தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் அவதி, செவிலியர் பணியில் தூங்கினர் என்று.


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 16:26

அரசு அவ்வளவு பலவீனமானதா? அதன் திட்டங்களை வராமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு திமுக சக்தி வாய்ந்த கட்சியா? சூப்பர். சூப்பர். அப்புறம் என்ன கூந்தலுக்கு.... வேணாம் சென்சார் ல போயிடும்.


P. SRINIVASALU
நவ 13, 2024 14:36

நீங்கள் இருக்கும் வரை இந்தியாவில் எந்த மாற்றமும் வராது. பத்துவருசத்தில் வராதது இப்போ வருமா?


N Sasikumar Yadhav
நவ 13, 2024 14:59

திருட்டு திராவிட மாடல் அரசுகள் கொடுக்கும் இலவசத்தில் இருக்காமல் உழைத்து வாழ பழகுங்கள் . பாரதம் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என உங்க கண்களுக்கு நன்றாக தெரியும்


hari
நவ 13, 2024 16:33

சீனிவசலு முரசொலி வாசகரோ.....


Narayanan Muthu
நவ 13, 2024 20:32

மோடி ஆட்சியில் இந்த பத்து வருடங்களில் பெருநிறுவன அதானி அம்பானி போன்ற குஜராத்திகளின் வளர்ச்சியை தவிர வேறெந்த வளர்ச்சியும் இல்லை. வறுமை கோட்டிற்கு கீழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒன்றே மோசடியின் சாதனை 373 மில்லியன்ஸ்


முக்கிய வீடியோ