பா.ஜ., உடன் கூட்டணி இல்லை!
ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பது எங்களது நோக்க ம் தான். அதற்காக, பா.ஜ., உடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. கடந்த காலத்தில் மற்ற கட்சிகள் செய்த தவறை செய்ய மாட்டோம். இந்த விவகாரத்தில் தேசிய கட்சியான பா.ஜ., கொஞ்சம் நேர்மையாக நடந்து கொ ள்ள வேண்டும். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிமக்களை பிரிக்கும் பேச்சாளர்! 
பீஹார் சட்டசபை தேர்தலில், 'நட்சத்திர பேச்சாளர்' என்ற பெயரில், பா.ஜ.,வை ஆதரித்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் நட்சத்திர பேச்சாளர் அல்ல; மக்களை பிரிக்கும் பேச்சாளர். அவரை போன்ற வகுப்புவாத பிரமுகர்களை பீஹார் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதிபெரிய மனசுக்காரர்கள்! 
பீஹார் சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகளை வழங்கிய பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்களுக்கு நன்றி. இரு கட்சி தலைவர்களும் பெரிய மனசுக்காரர்கள். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தக்க வைக்கும். சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி