உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிந்தது முறிந்தது தான்: மத்திய அரசு

சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிந்தது முறிந்தது தான்: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை,'' என மத்திய அரசு கூறியுள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக ஊழியர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், இங்கிருந்த தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டனர்.பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் செய்த அனைத்து விஷயங்களும் பதற்றத்தை அதிகரிக்க செய்தது. அந்நாட்டிற்கு தான் இழப்பு ஏற்பட்டது. அந்நாட்டின் விமானப்படை விமானங்கள், டுரோன்கள் ஆகியன தாக்கி அழிக்கப்பட்டன. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. வரும் 12ம் தேதி மாலை பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை . பாகிஸ்தான் தரப்பானது, இந்தியாவை தொடர்பு கொண்ட பிறகு இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்பட்டது. போருக்கு முந்தைய அல்லது பிந்தைய என எந்த நிபந்தனையும் கிடையாது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடரும். இந்தியா எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையில் மாற்றம் கிடையாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ravi Kulasekaran
மே 11, 2025 20:30

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இதோடு ஆக்கிரமிப்பு காஷ்மீர் கைப்பற்ற வேண்டும் வாகா எல்லையில் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்


venugopal s
மே 11, 2025 10:53

பெரிய அண்ணன் அமெரிக்கா சொன்னால் கேட்டுக் கொண்டு கொடுத்து விடுவார்கள்!


Chandrasekaran NS
மே 11, 2025 02:06

மத அடிப்படைவாத தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானிகள் அனைவரும் POK வை விட்டு வெளியேறி ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு பார்க்கலாம். சிந்துநதி நீரை சிந்தலாமா_வேண்டாமா என்று


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 11, 2025 02:05

மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து(Cancel) செய்ததா அல்லது நிறுத்தி (Hold) வைத்துள்ளதா....???


பல்லவி
மே 10, 2025 23:39

Our resources are limited and not available for other people only for our nation


Bhakt
மே 10, 2025 23:06

வேண்டும் என்றால் ......


Karthik
மே 10, 2025 22:33

அந்த பக்கிகளிடம் ஆயுதங்கள் தீர்ந்திருக்கும். போதிய போர்க்கருவிகளும் ஆயுதங்களும் இல்லாத காரணத்தால் சம ரசம் பேச்சு நடத்த வந்திருப்பான் அயோக்கியன். இதன் பின்னர் இவன் ஆயுதங்களை சேகரித்து மீண்டும் வருவான் தாக்குவதற்கு.


Barakat Ali
மே 10, 2025 22:24

சரியான முடிவு .......


Sivagiri
மே 10, 2025 22:00

POKவை விட்டு பாகிஸ்தான் படைகள் - பயங்கரவாதிகள் என்று ஒரு ஆள் கூட இல்லாமல் வெளியேறிய பிறகு - பார்க்கலாம் . .


Sivagiri
மே 10, 2025 21:57

தண்ணீர் வேணும்னா , டில்லிக்கு வந்து , கேட்கட்டும் , லிட்டர் இவ்வளவு-ன்னு , காசை கட்டீட்டு , வேங்கிட்டு போவட்டும் , , , இனிமே எல்லாம் அப்டிதான் - ஆங் - -


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை