உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது: பிரதமர் மோடி பேச்சு

எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது: பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான்'' என பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எங்கள் அரசு செயல்படுத்தி வரும் கொள்கைகள் அடுத்த 100 ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும். இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான். ஏழைகளின் பிரச்னைகளை அரசு ஊழியர்கள் கேட்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2wqigstv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னுரிமை கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். இன்று நாம் வேகமாக மாறிவரும் உலகில் இருக்கிறோம். வேகமாக மாறி வரும் காலங்களில் உலகளாவிய சவால்களை நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இன்னும் ஒரு பெரிய சவாலாக இருப்பதை காண்கிறீர்கள். இது ஒரு பெரிய நெருக்கடி. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் அரசு ஊழியர்கள். நீங்கள் வெறும் அரசு ஊழியர் மட்டுமல்ல, புதிய இந்தியாவின் கைவினைஞர்கள். கடந்த 11 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வெற்றிகள், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை பெரிதும் வலுப்படுத்தியுள்ளன.இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

pmsamy
ஏப் 22, 2025 07:09

மணிப்பூர்ல ரொம்ப காலமா பிரச்சனை இருக்கு தெரியுமா?


பல்லவி
ஏப் 21, 2025 22:35

குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உருப்படாத ஆட்சி யாளர்கள்களாக இருக்கிறார்கள் ஆனால் படிப்பது வேதம் இடிப்பது………..ல்


thehindu
ஏப் 21, 2025 21:52

டாஸ்மாக்கில் உள்ள நண்பர்களை மட்டும் நினைவில் கொண்டு , மற்ற போதை நண்பர்களை மறந்தது ஏன்?


J.Isaac
ஏப் 21, 2025 21:22

இந்தியாவில் கிட்டத்தட்ட 42 % இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பது செய்தி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 21:16

ஊ பீ யி ஸ் க்கு இருநூறு ஊவா, குவார்ட்டர், பிரியாணி இப்படியே வாழ்க்கை முடங்கிருச்சு .... அதைத்தான் சுட்டிக்காட்டுறார் போல .....


Padmasridharan
ஏப் 21, 2025 19:53

லஞ்சத்தை வாங்கும் அரசு அதிகாரிகளை கம்மி ஆக்கினாலே அவங்கவங்க பணம் அவங்க கிட்டயே இருக்கும். நிறைய குடிமகன்கள் பின் தங்க மாட்டார்கள்.


S.Martin Manoj
ஏப் 21, 2025 19:13

அதுதான் அம்பானிக்காக பெட்ரோல் விலையும் அதானிக்காக கேஸ் விலையும் ஏற்றியாகி விட்டதே அப்புறம் எப்படி அவர்கள் பின்தங்குவார்கள்.


அப்பாவி
ஏப் 21, 2025 18:16

பன்னிரண்டு வருஷமா இதே பல்லவி.


V Venkatachalam
ஏப் 21, 2025 18:57

தீய முக கடந்த தேர்தல் அறிக்கைகள் மறந்து போச்சா? காபி அண்ட் பேஸ்ட்.. க உ பீஸ் இதெல்லாம் தெரியாது மாதிரி அடிச்சு உடுவாய்ங்க.


Apposthalan samlin
ஏப் 21, 2025 17:59

ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார் ?இவருக்கு ஸ்டாலின் ஒன்னு மில்லியன் மடங்கு மேல்


Kumar Kumzi
ஏப் 21, 2025 18:42

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய பாவாட்ஸ் கூமுட்ட ஓங்கோல் துண்டுசீட்டு விடியல துண்டுசீட்டு இல்லாமல் பத்திரிகையாளருக்கு பதில் சொல்ல சொல்லு


J.Isaac
ஏப் 21, 2025 21:18

குமார் அவர்களே சோத்துக்கு வழியில்லாமல் வேலை தேடி கிறிஸ்தவ நாடுகளுக்கு வேலைக்கு செல்லுவதை என்ன சொல்ல ?


P. SRINIVASAN
ஏப் 21, 2025 17:38

யாரு அந்த ரெண்டு பெற? அதானி அண்ட் அம்பானி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை