உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த உறுதியும் அளிக்கவில்லை: டிரம்ப் பேட்டி குறித்து இந்தியா விளக்கம்

எந்த உறுதியும் அளிக்கவில்லை: டிரம்ப் பேட்டி குறித்து இந்தியா விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க பொருட்களுக்கு வரிக் குறைப்பு தொடர்பாக இந்தியா எந்த உறுதியையும் அளிக்கவில்லை என வர்த்தகத்துறை செயலாளர் கூறியுள்ளார்.சமீபத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் போது, ' இந்தியாவில் அதிகளவு வரி உள்ளது. அங்கு எதையும் விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. அதனை அம்பலப்படுத்திய பிறகு, வரியை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது,' எனக்கூறியிருந்தார்.இதற்கு இந்தியாவில் விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.இந்நிலையில் பார்லிமென்ட் குழு முன்பு வர்த்தகத்துறை செயலாளர் சுனில் பர்திவால் கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருப்பதால், டிரம்ப் பேச்சு மற்றும் மீடியா அறிக்கைகளின் அடிப்படையில் யாரும் முடிவெடுக்கக் கூடாது.இருவரும் பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கான பணிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டு உள்ளன.வெறும் வரிகளை குறைத்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், நீண்ட கால வர்த்தகத்தில் ஒத்துழைப்பை ஈட்டும் வகையில் பணிகள் நடக்கின்றன. அமெரிக்க பொருட்களுக்கான வரிக்குறைப்பு தொடர்பாக இந்தியா எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. தடையற்ற வர்த்தகத்திற்கு இந்தியா ஆதரவாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் வகையில் வர்த்தகத்தை தாராளமயமாக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Oviya vijay
மார் 11, 2025 18:56

இங்கே கூட ஒருத்தரு துபாய் போனாரூ அமெரிக்கா போனாரூ ஆனா இங்க ஒரு ரூவா கூட முதலீடு வரல...ஆனா 200 ரூவா மட்டும் பட்டுவாடா ஆகுது. நல்லா முட்டு குடுக்க மட்டும்...


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 11, 2025 18:31

சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்றிருந்த பொழுது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று RTI தகவல் தெளிவாகச் சொல்கிறது .....


சுரேஷ்சிங்
மார் 11, 2025 18:24

பெரிய ஆளுங்க பேசிட்டு வருவாங்க. விளக்கம் குடுப்பதற்கு ஓரமா உக்காந்திருப்பவனை கூப்புடுவாங்க.


अप्पावी
மார் 11, 2025 18:22

ஒண்ணுமே பேசாமலேயா எகான் மஸ்க்கு டெஸ்லா காரை இந்தியாவுக்கு அனுப்பப் போறாரு


SANKAR
மார் 11, 2025 19:12

starlink alsocoming


अप्पावी
மார் 11, 2025 17:56

ரெண்டுலே யாரோ ஒருத்தர் பொய்யாப் புளுகறாங்க. அமெரிக்காவுக்கு பறந்து போயிட்டு வர்ராங்க.