உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

இந்தியாவை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பொருளாதார வலிமை கொண்ட இந்தியாவை, எந்த நாடும் புறக்கணிக்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில், உலக வளர்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தொலைதூர நாடான அமெரிக்காவாக இருக்கட்டும், அண்டை நாடான சீனாவாக இருக்கட்டும், எந்த ஒரு நாட்டினாலும், இந்தியாவை புறக்கணிக்க முடியாது. இந்தியா ஜனநாயகம் மிக்க நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், உலகில் உள்ள ஒவ்வொரு 6 நபர்களிலும் ஒரு இந்தியர் இருக்கிறார். எனவே, இந்தியாவின் பொருளாதாரத்தை நிராகரிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் மற்றும் மிகப்பெரிய நாடுகளில் செயல்படும் பெரிய நிறுவனங்களில் திறமை வாய்ந்த இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். வளர்ச்சிக்கான பாதையை வரையறுக்கும் இடத்தில் நாம் இருக்கிறோமா? என்று கேட்டால், இந்தியாவைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் மூலம் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதல் பலதரப்பு வங்கி வரையில் அனைத்திலும் இந்தியா சிறந்த நாடாக இருந்து வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Oviya Vijay
அக் 24, 2024 20:41

இவர் நம் நாட்டிற்கு நிதியமைச்சர் எனும் போர்வையில் கிடைத்த சாபக்கேடு.


Subash BV
அக் 24, 2024 13:29

Shes right Brain power and purchasing power lies in BHARATH only. None can miss.


Mohamed Younus
அக் 24, 2024 12:15

உண்மை .


கிஜன்
அக் 24, 2024 11:07

பேசினாங்க சரி... கேக்குறதுக்கு கூட்டத்தையே காணோம் ? இந்த ஒரே ஒரு ஆள் கூட பேசுறதுக்கா அம்புட்டு தூரம் போனாங்க ? பேசாம ...ஜூம்ல பேசியிருக்கலாம் ...


hari
அக் 24, 2024 11:38

டாஸ்மாக்கை தேடி நம்ம போறோம் . அது நம்மளை தேடி வருதா?


Sakthi,sivagangai
அக் 24, 2024 12:08

அறிவாலய உபிஸ்களில் பலவகைகள் உண்டு அதில் ஒருவகை..


sundarsvpr
அக் 24, 2024 08:26

பாரத தேச மக்கள் உலகில் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர். தேச பற்று உள்ளவர்கள். அதே நேரம் பணி செய்திடும் நாட்டின் வளர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கின்றனர். காரணம் இங்கு வளம் பெருகினால்தான் தாய் நாட்டிற்கு உதவ முடியும் என்பதனை சத்தியத்துடன் கடைபிடின்றனர்..


புதிய வீடியோ