உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதெல்லாம் முடியாதுங்க; வழக்கை ரத்து செய்யக்கோரிய பிரிஜ் பூஷனுக்கு டில்லி கோர்ட் குட்டு

அதெல்லாம் முடியாதுங்க; வழக்கை ரத்து செய்யக்கோரிய பிரிஜ் பூஷனுக்கு டில்லி கோர்ட் குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு டில்லி ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 66, மீது, மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை கோரி, தலைநகர் புதுடில்லியில், ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, புதுடில்லி போலீசார் விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ரத்து செய்ய முடியாது!

இந்நிலையில், 'தன் மீதான பாலியல் புகார்களில் உண்மை இல்லை. வழக்கை ரத்து செய்ய வேண்டும்' டில்லி ஐகோர்ட்டில் பிரிஜ் பூஷன் வழக்கு தொடர்ந்தார். இன்று (ஆகஸ்ட் 29) வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'பிரிஜ் பூஷன் மீதான முதல் தகவல் அறிக்கையை எப்படி ரத்து செய்ய முடியும்? உங்கள் மீதான புகார்களில் உண்மை இல்லை என ஒரு காரணமாவது கூற முடியுமா?

உத்தரவு

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்?'' என கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு விபரங்களை செப்.,26க்குள் தாக்கல் செய்ய பிரிஜ் பூஷன் தரப்புக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஆக 29, 2024 19:56

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தண்ணீரில் எழுதப்பட்ட கோலங்கள்.


gmm
ஆக 29, 2024 14:00

ஒரு பெண் தாத்தா, தந்தை, கணவன், மகன், பேரனுடன் தனி தன்மையுடன் வாழ்ந்து தெரிவிக்கும் புகாருக்கும், பிற சூழலை ஏற்று வாழ்ந்து செய்யும் புகாருக்கு வேறுபாடு இருக்க வேண்டும். முதல் புகாரில் வரும் நபர் தூக்கு, ஆயுள் தண்டனைக்கு உரியவர். இரண்டாவது புகாரில் வருபவர் அபராதம், தண்டனை விதிக்கப்பட்டது விடுவிக்க வேண்டியவர். பொலிஸார் குற்ற பத்திரிகை மக்களுக்கு ஒரு மஞ்சள் பத்திரிகை.? நீதிமன்றம் பெரிய அரசியல் கட்சியாக மாறி வருகிறது.


KRISHNAN R
ஆக 29, 2024 13:05

பெரிய கட்சியோ சின்ன கட்சியோ...அரசியல் வழக்குகள்.... முடிவுக்கு வரும் ஆனா வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை