உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கில்லுக்கு கல்தா... சஞ்சு சாம்சனுக்கு இடம்; டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

கில்லுக்கு கல்தா... சஞ்சு சாம்சனுக்கு இடம்; டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: அடுத்தாண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியும், விவாதமும் எழுந்தது. இதையடுத்து, நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் கில் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் எதிர்பார்த்ததைப் போலவே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் டி20 உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (டிசம்பர் 20) அறிவிக்கப்பட்டது. கில் மற்றும் ஜிதேஷ் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் அணியில் இடம்பிடித்துள்ளனர். சஞ்சு சாம்சனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில், அக்ஷர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ரானா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சூரியா
டிச 21, 2025 05:58

சூர்யகுமார் யாதவும் நீக்கப்படவேண்டியவரே!


சந்திரன்
டிச 20, 2025 22:24

t20 போட்டிக்கு இஷான் ரிங்கு சிங் சரியான தேர்வு எப்படியாவது கில்லை தேர்வு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் காம்பிர் பல தவறுகளை செய்துவிட்டார். சஞ்சு சாம்சனை அவர் பழி வாங்கி விட்டார் இனியாவது திறமை வாய்ந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்


Sowdarpatti Rayarpadi Ramaswamy
டிச 20, 2025 19:48

இரு தமிழக ஐபில் உரிமையாளர்களும் தனியார்கள், இங்கு தமிழ்நாட்டு வீரர்கள் என்பதை விட வெற்றி பெரும் வீரர்களே தேவை. லாப நோக்கம் என்பது திராவிடம், தமிழ் அறியாது, இது கிரிக்கெட்டுக்கு மட்டும் அல்ல , அது அனைத்து தனியார் தொழில்லுக்கும் பொருந்தும் . ஒரு ஐபில் உரிமையாளர் தலைமை குடும்பத்து ஆட்சியாளர் கூட.


Narasimhan
டிச 20, 2025 15:25

தமிழகத்தை சேர்ந்த இரண்டு IPL அணி உரிமையாளர்கள் ஒரு தமிழக வீரரை கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை. வடக்கன்களை 14.5 கோடி அதுவும் இரண்டு வீரர்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதை யாரும் கேள்வி கூட கேட்கவில்லை


Field Marshal
டிச 20, 2025 15:14

திராவிட வீரர்கள் உருவாக்க விளையாட்டு மந்திரி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லையா


Priyan Vadanad
டிச 20, 2025 15:22

வடிகட்டிய பைத்தியக்காரத்தனமான கருத்து.


raja
டிச 20, 2025 15:51

அவர் கட்டத்தில் எந்த தவறும் இல்லையே..


vadivelu
டிச 20, 2025 18:44

திராவிடம் என்பது நிலம் சார்ந்தது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் திராவிட நிலம். இப்ப நீங்கள் வீரர்கள் எந்த மாநிலங்களை சார்ந்தவர்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் சாதி மதம் பார்க்காத மாமனிதர்கள் ஆயிற்றே.


Field Marshal
டிச 22, 2025 15:02

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் நாங்கள் திராவிட நாட்டவர்கள் என்று சொன்னதுண்டா ..கமலஹாசனை கேட்டா சொல்லுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை