உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்களுக்கு தடை

பாக்., வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்களுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் மத்திய அரசு முறித்துக் கொண்டுள்ளது. அட்டாரி வாகா எல்லையையும் மூட உத்தரவிட்டுள்ள அரசு பாகிஸ்தானியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறியுள்ளது.இந்நிலையில், அட்டாரி வாகா எல்லையில் கடந்த 1959ம் ஆண்டு முதல் கொடியிறக்கும் நிகழ்வு தினமும் நடக்கும். அப்போது, இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கி கொள்வார்கள். தற்போது, இதற்கு பிஎஸ்எப் தடை விதித்து உள்ளது. பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் எனக்கூறியுள்ள அந்த அமைப்பு, அங்குள்ள கதவுகளை மூடி வைக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டையும், அமைதியும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்ற இந்தியாவின் கொள்கையை எடுத்துரைப்பதாக தெரிவித்து உள்ளது. இதனையடுத்து வாகா எல்லையில் கதவுகளை மூடியபடி கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கைகுலுக்கும் நிகழ்வும் நடக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KR india
ஏப் 25, 2025 07:00

தினமலர் வாசகர் திரு. மருதுபாண்டி அவர்கள் சரியாகத்தான் சொல்லியுள்ளார். வாகா எல்லையில், தினமும் இந்த கூத்து நடக்கிறது. எல்லை ராணுவ வீரர், இரண்டு கண்களையும் மிரட்டும் தொனியில் விரிக்கிறார். இரண்டு கைகளாலும், மீசையை முறுக்குகிறார் வாமன அவதாரத்தில், பெருமாள், காலை தலைக்கு மேல் தூக்கி வானத்தை அளந்தது போல், நம் ராணுவ வீரர்களும், காலை தலைக்கு மேல் தூக்கி விறைப்பாக நடக்கிறார்கள். சிறிது நேரத்தில், திடீரென்று, குடு, குடு என்று ஓடுகிறார்கள். சிறிது தூரம் ஓடி, பின் நின்று சல்யூட் அடிக்கிறார்கள். சுற்றுலா வந்த கூட்டம், கை தட்டி மகிழ்கிறது. எதற்கு, இந்த "தினக் கூத்து" இது என்ன சர்க்கஸா ? தினமும் இந்த, கோமாளித் தனம் வேண்டாம் எனினும், வருடத்திற்கு ஒரு முறை, "இந்திய சுதந்திர தினம்" அன்று ஒரு நாள் மட்டும், இந்த நடைமுறையை வைத்து கொள்ளலாம். ஜெய் ஹிந்த்


தாமரை மலர்கிறது
ஏப் 25, 2025 00:01

பாகிஸ்தானை எப்படி வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று அமித் ஷாவிற்கு தெரியும். அதற்குள் போர் மேகத்தை பரவவிடக்கூடாது. இதை தான் அமெரிக்காவும் சீனாவும் எதிர்பார்க்கிறது. இந்தியா குட்டிச்சுவர் ஆனால், அதைப்பார்த்து கைகொட்டி சிரிக்க பலநாடுகள் காத்திருக்கின்றன. இப்போது பிஜேபி ஆட்சியில் மிகவும் வேகமாக வளர்ந்துவருவதை பார்த்து பலநாடுகள் வயிறு எரிந்து கொண்டிருக்கின்றன.


MARUTHU PANDIAR
ஏப் 24, 2025 23:43

ஒரு விஷயம். அமெரிக்க சிறையிலிருந்து கொண்டுவரப்பட்ட பாக் மூர்க்கன் தஹாவூர் தொடர்பான தாக்குதல் இது அவனுக்கு ஆதரவான தாக்குதல். சட்டுப் புட்டுன்னு அவனை தூக்கில் போடணும்.விசாரணை கிசாரணைன்னு நீட்ட நீட்ட இப்படி தான் பண்ணுவானுக வெறிப்பயலுக. ராணுவ கோர்ட் ஒன்று அமைப்பதற்கு மிகச் சரியான தருணம். ஒரே வாரத்தில் விசாரணை மற்றும் தண்டனை முடியனும்


MARUTHU PANDIAR
ஏப் 24, 2025 23:27

இந்த வாகா எல்லை கதவும், அதனருகில் நின்று நெஞ்சளவு காலை தூக்கி வைத்து ஒரு விறைப்பு சல்யூட் இந்த கண்ராவி கூத்தெல்லாம் யார் எப்போது எதற்காக துவங்கிய அர்த்தமற்ற சமாச்சாரங்கள். பகைவன் ஆண்டு முழுதும் கொலை செய்து கொண்டே இருப்பானாம், ஆனால் இந்த சம்பிரதாயம் மூலம் அவனோடு கைய குலுக்கனுமாம். உலகில் வேறு எங்கும் இல்லாத அர்த்தமற்ற கண்ராவி கூத்து எதை பேணுவதற்காக? விட்டொழிங்கப்பா.


thehindu
ஏப் 24, 2025 22:30

அனைத்தும் நாலவரால் ஏற்படுத்தப்பட்டது. அதானி அம்பானி டாடா போன்ற நால்வருக்காக நடக்கிறது


மீனவ நண்பன்
ஏப் 25, 2025 03:15

திராவிட சித்தாந்தத்தில் மூழ்கி பெயரையே ஒழுங்கா எழுத வக்கில்லை .அதானி அம்பானி டாடா மூணு பேர் தான் ..உன்னை அடக்கம் செய்ய தான் நாலு பேர் தேவை


thehindu
ஏப் 24, 2025 22:28

இந்து மதவாத அரசின் விரக்தி உச்சத்திற்கு சென்றுவிட்டது . இவ்வளவு நாட்கள் மமதையில் இருந்துவிட்டு இப்போது ஒட்டுமொத்த அரசும் KNEE Jerk reaction ல் உள்ளது


JaiRam
ஏப் 25, 2025 00:06

பாக்கிஸ்தானை அழிக்கவேண்டும் இங்குள்ளவர்களை பாக்கிஸ்தானுக்கே துரத்தனூம்


புதிய வீடியோ