உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேடிக்கை மட்டுமே பார்க்கிறாங்க.... வெள்ள பாதிப்பால் நொந்து போன மம்தா

வேடிக்கை மட்டுமே பார்க்கிறாங்க.... வெள்ள பாதிப்பால் நொந்து போன மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளில் மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கனமழை காரணமாக பரக்கா அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பகுதி மாவட்டங்களான கூச், பெஹார், ஜல்பாய்குரி, அலிபுர்துர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் மம்தா பானர்ஜி, அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பராக்கா அணையை மத்திய அரசு முறையாக பராமரிக்காததால், நீர்பிடிப்பு பகுதிகளின் அளவு குறைந்துள்ளது. இதனை விரிவுபடுத்த பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தேர்தல் பிரசாரத்திற்காக மட்டுமே பா.ஜ., தலைவர்கள் இங்கு வருகின்றனர். வெள்ள பாதிப்பு நிவாரண நிதி மேற்கு வங்கத்திற்கு மட்டும் தான் மறுக்கப்படுகிறது. இயற்கை பேரிடருக்கு எதிராக போராடி வரும் மாநில அரசுக்கு உதவாமல் மத்திய அரசு இருந்து வருகிறது. டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரிய நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் ராணுவ வீரர்களுடன் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.V. Iyer
செப் 30, 2024 04:19

இந்த எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசிடம் பணம் கேட்பது. கொடுத்த பணத்தில் முக்கால்வாசியை முழுங்கி ஏப்பம் விட்டு ஒன்றும் செய்யாமல் விடுவது. இதுவே வழக்கமாகிவிட்டது.


சிவா அருவங்காடு
செப் 29, 2024 23:35

மாநில முதல்வர் என்பவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் உடன் இணக்கமாக இருந்து தங்கள் சொந்த மாநில மக்கள் பயன் பெற என்ன வழி என்று நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் தங்கள் தகுதிக்கு மீறிய அதிகாரம் மற்றும் பதவியை பெற மக்களை மறந்து விடுகிறார்கள்... ஒரு நாள் சாயம் வெளுக்கும்...


அப்பாவி
செப் 29, 2024 22:33

உங்ஜ ராஜ்ஜியம் தானே... நீங்கதான் பாத்துக்கணும். ஜி.எஸ்.டி அவிங்க பாத்துக்குவாங்க.


RAAJ68
செப் 29, 2024 22:17

இந்த அம்மா தினமும் மோடியையும் மத்திய அரசையும் வசை பாடிக் கொண்டே இருப்பார் ஆனால் இவருக்கு உதவ வேண்டுமா. மத்திய அரசுடன் எப்படி நல்லிணக்கமாக இருக்க வேண்டும் என்பதை கலைஞர் ஒருவர் மட்டுமே அறிந்து வைத்தவர் அவர் பாதையை பின்பற்றுங்கள். தமிழகத்திலும் அப்படித்தான் பெரிய தலையில் இருந்து சில்லறை கிளைகள் வரை மத்திய அரசை செய்து கொண்டே இருக்கும் அதுவும் முரசு ஒளி பத்திரிகை வச பாடாத நாளே இல்லை. ஆனாலும் இவர்களுக்கு வேண்டியது மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதுவும் நடந்து கொண்டு தான் உள்ளன ஆனாலும் நன்றி கெட்டவர்களாக தினமும் வசை பாடிக்கொண்டே இருக்கின்றனர். சமீபத்தில் உதயாநிதி மோடியை கிண்டல் செய்தார் ஏளனம் செய்தார் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் அவர்களிடம் மோடி மண்டியிட்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்று. திமுக என்னவோ தனியாக ஜெயித்து தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்துள்ளது போன்று மற்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை