உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாத சம்பளம் ரூ.1 லட்சம் வாங்குபவர்களுக்கு...வருமான வரி கிடையாது

மாத சம்பளம் ரூ.1 லட்சம் வாங்குபவர்களுக்கு...வருமான வரி கிடையாது

புதுடில்லி : நடுத்தர வருவாய் பிரிவினரின் வரிச் சுமையை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வரி செலுத்த தேவையில்லை என, மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வருமான உச்ச வரம்பு, கடந்த ஆண்டு 7 லட்சம் ரூபாயாக இருந்தது; நேற்றைய அறிவிப்பின்படி, ஆண்டு வருமானம் 12.75 லட்சம் ரூபாயாக இருந்தாலும், வரிக்கழிவை முறையாக பயன்படுத்தினால், வரி செலுத்த தேவையில்லை. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அதில், முக்கிய அம்சமாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, 7 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, புதிய முறையில் வரி செலுத்துவதை தேர்வு செய்வோருக்கு பொருந்தும்.

பாராட்டு

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் மற்றும் 75,000 ரூபாய் நிலையான வரிக்கழிவும் சேர்த்தால், 12.75 லட்சம் ரூபாய் வரை இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர், 4 லட்சம் ரூபாய் முதல் கணக்கிட்டு, அந்தந்த வரி அடுக்குகளின்படி வருமான வரி செலுத்த வேண்டும். இதிலும், வரி அடுக்குகள் மாற்றப்பட்டுள்ளதால், 8 லட்சம் வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வரியில் 30,000 ரூபாயும், 24 லட்சம் வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வரியில் 1,10,000 ரூபாயும் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சிறப்பு வருவாய் ஏதுமில்லாத மாத சம்பளக்காரர்கள், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அப்போது, பிரதமர் மோடி உட்பட ஆளும் கூட்டணி எம்.பி.,க்கள் அனைவரும் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

வரி இழப்பு

வரி செலுத்துவோருக்கு கூடுதல் தொகை மிச்சமாகும் வகையில் வரி அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் நடுத்தர மக்களின் கையில் கூடுதல் தொகை இருக்கும்; இது, அவர்களது வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ள உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.வருமான வரியில் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் விலக்கு அளித்திருப்பதன் வாயிலாக, அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றாலும், நடுத்தர மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். வருமான வரி விலக்கை 12 லட்சம் ரூபாய் வரை அதிகரித்திருப்பதன் வாயிலாக, பொருட்களின் நுகர்வு அதிகரித்து உற்பத்தி துறை ஊக்கம் பெறும் என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க துாண்டுதலாக அமையும் என்றும் நிதிச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா போட்டியிடவும், விரைவான பொருளாதார வளர்ச்சி காணும் நாடாக நீடிக்கவும் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்பட்டிருப்பது உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த வாரம் புதிய மசோதா

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும்; முதலில் நம்பிக்கை, பிறகு ஆய்வு என்ற அடிப்படையில், வழக்குகளை குறைக்கும் நோக்கில் அது இருக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆண்டு வருமானம் வருமான வரி கணக்கு செலுத்த வேண்டிய வருமான வரித்தொகை

ரூ.13 லட்சம் (4ல - 0%) + (4ல - 8ல - 5%) + (8ல - 12ல - 10%) + (12ல - 13ல - 15%) ரூ. 75,000ரூ.17 லட்சம் (4ல - 0%) + (4ல - 8ல - 5%) + (8ல - 12ல - 10%) + (12ல - 16ல - 15%) + (16ல - 17ல - 20%) ரூ. 1,40,000ரூ.21 லட்சம் (4ல - 0%) + (4ல - 8ல - 5%) + (8ல - 12ல - 10%) + (12ல - 16ல - 15%) + (16ல - 20ல - 20%) + (20ல - 21ல - 25%) ரூ. 2,25,000ரூ.25 லட்சம் (4ல - 0%) + (4ல - 8ல - 5%) + (8ல - 12ல - 10%) + (12ல - 16ல - 15%) + (16ல - 20ல - 20%) + (20ல - 24ல - 25%)+ (24ல - 25ல - 30%) ரூ. 3,30,000சம்பளப் பிரிவினருக்கு 75,000 ரூபாய் நிலையான கழிவு வழங்கப்படுவதால், ஆண்டு வருமானம் 12.75 லட்சம் ரூபாய் வரை பெறும் ஊழியர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. களையிழந்த பழைய முறைவருமான வரி செலுத்துவதில் 'நியூ ரிஜிம்' எனப்படும் புதிய முறை 2020ல் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், பழைய முறையை தொடர விரும்புவோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பழைய முறையில், 80சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வரி விலக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக, கல்வி கட்டணம், ஆயுள் காப்பீடு, வீட்டு வாடகைப்படி, விடுமுறை பயணப்படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடு, பி.பி.எப்., முதலீடு, வீட்டுக்கடன் அசல் தொகை என இத்தனையும் சேர்த்து அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் கழித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மருத்துவ காப்பீடு பிரிமியம், புதிய ஓய்வூதிய திட்ட சந்தா, வீட்டுக்கடன் வட்டி என மேலும் வரி விலக்கு பெறலாம். பழைய முறையில் 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையில், அதற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால், 2.50 லட்சத்தில் இருந்தே பல அடுக்குகளில் வரி செலுத்த வேண்டும்.புதிய முறையில் சேமிப்பு, முதலீடு, செலவு என எதற்கும் வரி விலக்குகள் கிடையாது. மாறாக, 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வரி செலுத்த வேண்டிய அடுக்குகளும் பழைய முறையுடன் ஒப்பிடுகையில் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய முறையைப் போல, பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லாததால், புதிய முறையில் வரி தாக்கல் மிக எளிமையாக உள்ளது. மேலும், வரி விலக்குகளை பெற்ற பிறகும் பழைய முறையில் செலுத்த வேண்டிய வரியை விட, வரி விலக்குகளே இல்லாமல் புதிய முறையில் செலுத்த வேண்டிய வரித்தொகை குறைவாக இருக்குமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோரிடம் புதிய முறை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பழைய முறையை ஒரு தேர்வாக அரசு தொடர்ந்தாலும், அதற்கு எந்த புதிய சலுகையையும் 2020 முதலே அரசு அறிவிப்பதில்லை. இதனால், புதிய வரி முறைக்கு முற்றிலும் வரி செலுத்துவோர் மாறுவர் என அது எதிர்பார்க்கிறது. பாக்ஸ்பழைய முறையில் வரி (ரூபாய்)0 - 2.50 லட்சம் 0%2.50 - 5 லட்சம் 5%5 - 10 லட்சம் 20%10 லட்சத்துக்கு மேல் 30%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M Ramachandran
பிப் 02, 2025 17:46

சுடாலின் தமிழ்நாட்டிற்கு தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒதுக்க வில்லை என்று குறை பட்டுள்ளார். 7000 கோடி அதிகம் என்பதை பாவம் அவருக்கு சரியாக படித்து சொல்லாதவர்கள் குற்றம். அல்லது எழுதி படிக்க கொடுத்தவர்கள் குற்றம் போல் தெரிகிறது.


அப்பாவி
பிப் 02, 2025 15:06

இந்த சலுகை அவிங்க அவிங்களுக்காக குடுத்துக்கிட்ட சலுகை.


R.PERUMALRAJA
பிப் 02, 2025 12:57

சட்டு புட்டு னு 1 லட்சம் மேலே உள்ளவர்களுக்கு மட்டுமே வருமான வரி என்று கூறினால் நல்லவா இருக்கும் மக்களும் மறந்துவிடுவர், மக்கள் நியாபகம் வைத்து கொள்ளும்படி ஒரு பாராட்டு விழா வைத்து, ஒரு மாதத்திற்க்கு மேல் தெருவெங்கும், நாடெங்கும் பாராட்டு விழா வைத்து, அதில் பிரியாணி போட்டு, குத்தாட்டம் நடனம் வைத்து தானே வருமான வரி சலுகை அறிவிப்பு வெளியிட வேண்டும் . நிர்மலா அவர்கள் திடு திப்பு னு செய்வது நியாயமா?


Rajarajan
பிப் 02, 2025 08:39

இந்த வருமான வரி சலுகை, உண்மையில் யாருக்கு உபயோகமோ இல்லையோ, அரசு ஊழியருக்கு தான் கொண்டாட்டம். அவர்கள் தான் இந்த உபரி நிதியை, சொத்து வங்குவதிலும் / தங்கத்திலும் முதலீடு செய்வர். தனியார் வழக்கம் போல வரிக்கட்டும் இயந்திரம் தான். அதுசரி, இந்த வரிச்சலுகை பற்றாக்குறையை அரசு எப்படி ஈடு செய்யும் என்ற தெளிவான கருத்து இல்லை. கடன் வாங்கியா அல்லது வேறு வகையில் வரிவிதிப்பின் மூலம் ஈடு செய்வர் என்றால் எந்த வழியில் என்ற தெளிவான அறிக்கை இல்லை. எப்படியும் தனியாருக்கு மறைமுக விலைவாசி சுமையாக தான் இது ஈடு செய்யப்படும். அரசு ஊழியருக்கு இருக்கவே இருக்கிறது பஞ்சபடி நிவாரணம். எனவே, அவர்களைப்பற்றி அரசுக்கு கவலையும் இல்லை. ஆனால், நஷ்டத்தில் இயங்கும் மற்றும் தேவையற்ற பொதுத்துறை / அரசு நிறுவனங்களின் செயல்பாடு தேவையா? அவற்றால் தான் நாட்டின் பொருளாதாரத்தில் தேவையற்ற பெரும் சுமை என்ற உண்மையை மட்டும் எந்த மத்தியில் இருக்கும் அரசும் / மாநிலத்தில் இருக்கும் அரசும் ஒப்புக்கொள்வதே இல்லை. அந்த நஷ்டத்தை பெரும்பாலும் நிவர்த்தி செய்து, அதை புதிய முதலீட்டில் திருப்பிவிட்டால், நாடு மிக விரைவில் வளர்ச்சியை எட்டும் என்பதே உண்மை. தனிநபர் நமக்கு தெரிந்த உண்மை, அரசுக்கு தெரியாதா என்ன? இந்த சுமையில் சிக்குவது தனியார் தான். எல்லாம் வோட்டு மயம். இதில் அனைவருக்குமான பட்ஜெட், ஏழை எளியோருக்கான சிறந்த பட்ஜெட், பொருளாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட் என்று தங்களை தாங்களே தட்டிக்கொடுப்பர். ஆகமொத்தம், பட்ஜெட் என்பது நிரந்தர செலவான அரசு ஊழியரின் தேவைகளுக்கான பிரதானம் தவிர, மீதி உள்ள சொற்ப நிதி தான் மற்ற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப் படுத்திறதா இல்லையா? அதுவும், இவைதான் நாட்டின் கடன்சுமை மூலம் சமாளிக்கப்படும். இதனால் தான் குறித்த காலத்தில், பெரும்பாலான அரசு திட்டங்கள் நிறைவேறுவதே இல்லை. உண்மையா, இல்லையா ?? இதுபற்றி, பொது விவாதத்துக்கு வாருங்களேன் பேசுவோம்.


Kasimani Baskaran
பிப் 02, 2025 07:49

ஓட்டுப்போடுபவர்களுக்கு மட்டும் வரிச்சலுகை என்று சொல்லியிருக்கலாம்.


கிஜன்
பிப் 02, 2025 03:27

மேம் .... பிஹார் சட்டமன்றத்துல வாசிக்கவேண்டியதை ....பார்லிமென்டில் வாசித்து விட்டார் .... கடந்த ஆண்டை விட 11 ஆயிரம் கோடி கல்விக்கு குறைவாக ஒதுக்கி இருக்கிறார் .... படிச்சவன் நமக்கு ஒட்டு போடமாட்டான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை போல ...


ஆரூர் ரங்
பிப் 02, 2025 10:50

TN மாநிலத்துக்கு மட்டும் 7000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி மகன் மருமகன் பாக்கெட்களுக்கு போகும். யுனஸ்கோ பட்டம், திராவிட ரீல் களையே சொல்லிக் கொடுக்கும் பொய்யான கல்விக்கு எத்தனை அளித்தாலும் வீண்.


KR india
பிப் 02, 2025 03:10

மாண்புமிகு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வேண்டுகோள் : வருமான வரித்துறையில் சிறப்பான ஒரு பட்ஜெட் கொடுத்தது போல், கீழ்க்கண்டவற்றிளும், உங்கள், சீர்திருத்தம் வேண்டும். 1 குறித்த நேரத்திற்குள், ஆண்டறிக்கை தாக்கல் செய்யமல், அபராதம் கட்டி, கட்டியே, பல சிறிய நிறுவனங்கள் இழுத்து மூடப் பட்டுள்ளன. தங்கள் நிர்வாகத்தின் கீழ் வரும் Ministry of Corporate Affairs துறையின், கருணையற்ற, அளவுக்கு அதிகமான, அபராத தொகை விதித்து வருவதிலிருந்து, சிறிய நிறுவனங்கள் என்று வரையறைக்குப்பட்ட MSME sectors மற்றும் Small Companies u/s.285 ஆகியவற்றிற்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். 2 தயவு செய்து "Company & LLP Law Settlement Scheme " கொண்டு வந்தால் பல சிறிய நிறுவனங்கள் பயன் பெரும். மீண்டும் உயிர் பெறும் . இது சம்பந்தமாக, ஏற்கனவே, ICSI தலைவர் நரசிம்மன் அவர்கள், CL&LLSS-2024 வாய்ப்பு வழங்க வேண்டுமென Secretary to MCA குமாரி. Deepti Gaur Mukerjee, Shastri Bhavan, Delhi அவர்களுக்கு 21-Oct-2024 தேதியிட்டு அனுப்பிய வேண்டுகோள் கடிதம், கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது ? 3 தற்போதுள்ள MCA contractor "LTI Mind Tree" யின் செயல்பாடு திருப்தி இல்லை. சிறிய விசயத்திற்கு கூட 2 அல்லது 3 முறை "Grievance " போட்ட பின்பு தீர்வு, கிடைக்கிறது. அவர்களின் "Software" ஒழுங்காக வேலை செய்தால் "Grievance " போட வேண்டிய தேவையே வராது அல்லவா ? , மீண்டும், Tata Consultancy Service சேவை MCA வுக்கு இன்றைய தேவை.


ஆரூர் ரங்
பிப் 02, 2025 11:06

MSME களுக்கு பொருந்தும் பல சிறு விதிமீறல்கள் DECRIMINALISE செய்யபட்டு அபராதம் தண்டனை கிடையாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். சட்ட நடைமுறைகளை சரியாக அறியாமல் தொழில் துவக்குவது நல்லதல்ல. அதுதான் பல அரசு ஆய்வாளர்களை கையூட்டு கேட்க தூண்டுகிறது. .


KR india
பிப் 02, 2025 02:28

திருமதி. நிர்மலா சீதாராமன் இப்போதுதான் மிக சிறப்பான, அருமையான பட்ஜெட்-ஐ வழங்கி இருக்கிறார்கள் அவருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அரசியல் கட்சி சாராத, பொருளாதார துறை சார்ந்த நிபுணர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிக்கைகள் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை முதல் முறையாக, உச்சி முகர்ந்து பாராட்டி உள்ளன. 1 வீட்டு வாடகைக்கு வரி பிடித்தம் Rs.2.40 Lakh இருந்தது, தற்போது Rs.6 Lakh வரை வரி இல்லை 2 மூத்த குடிமக்களின் வட்டி வருமானம் Rs.50,000 இருந்தது, தற்போது Rs.1 Lakh வரை வரி இல்லை 3 TCS Limit Rs.7 லட்சம் இருந்தது, தற்போது Rs.10 Lakh வரை வரி இல்லை 4 கடந்த காலங்களில், ஏதோ ஒரு காரணத்திற்க்காக, வரி தாக்கல் செய்ய மறந்தவர்களுக்கு, நல் வாய்ப்பாக, பிரிவு 1398A மூலமாக மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசம் என்று இருந்ததை, தற்போது மேலும் 4 ஆண்டுகளாக உயர்த்தி உள்ளனர். வருமான வரித்துறை வெளியிட்ட, புள்ளி விவரப்படி இதுவரை இந்த சலுகை மூலம் 90 லட்சம் பேர் பலன் பெற்றுள்ளனர். அதாவது, தாமதமாக வரி தாக்கல் செய்துள்ளனராம். அவர்கள் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாது. 5 எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, யாரும், எதிர்பார்க்காத, சலுகை அணுகுண்டு ஒன்று வீசியுள்ளார். 12 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வரியே கிடையாது கூடுதல் சலுகையாக அவர்களுக்கு Rs.75,000 வரை, Standard Deduction கிடைக்கும். இந்த கூடுதல் சலுகை Rs.75,000 அனைவருக்கும் அல்ல. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அதாவது "மாத சம்பள தாரர்களுக்கு" மட்டுமே இந்த கூடுதல் சலுகை கிடைக்கும்.இதன் மூலம் Rs.12,75,000 /- வரை சம்பாதிக்கும், மாத சம்பள ஊழியர்கள் பலன் பெறுவார்கள். பொறுங்கள் அது மட்டுமல்ல. பிரிவு 80CCD2 மூலம் செய்யும் NPS contribution க்கும் வரிவிலக்கு கூடுதலாக உண்டு அரசு மற்றும் தனியார் நிறுவன மாத சம்பள ஊழியர்களுக்கு மட்டும். மாற்று திறனாளிகளுக்கு, அலுவலகம் to வீடு போக்குவரத்து செலவு கழிவு உண்டு. Perquisites for official purposes சலுகை உண்டு. Form-16 இல் conveyance allowance குறிப்பிட்டு இருந்தால் அந்த சலுகையும் உண்டு. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ""New Tax Regime" என்ற புதிய வருமான வரியின் கீழ் வரும் சலுகையாகும் . நன்றி சொல்வோம் பாரதீய ஜனதா கட்சிக்கும் அதை செவ்வனே வழி நடத்தி வரும் மாண்புமிகு மோடி ஐயா அவர்களுக்கும், நிதி மந்திரியாக பதவி ஏற்று "மதி" மந்திரியாகவும், அனைவரும் "மதிக்க" கூடிய மந்திரியாகவும் மாறி இருக்கும் திருமதி.நிர்மலா சீதா ராமன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி


சமீபத்திய செய்தி