உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த மொழியையும் திணிக்கக் கூடாது; ஆங்கிலம் போலவே ஹிந்தியும் அவசியம்; சொல்கிறார் பவன் கல்யாண்

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது; ஆங்கிலம் போலவே ஹிந்தியும் அவசியம்; சொல்கிறார் பவன் கல்யாண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. ஆங்கிலம் போலவே ஹிந்தியும் இன்று அவசியமாகிவிட்டது. ஆனால் கட்டாயப்படுத்தாமல், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்க வேண்டும்,' என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1j2e7ta5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. தேசிய ஒற்றுமைக்கு நான் ஆதரவானவன். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு நடுவே வாழ்ந்த கொண்டிருக்கிறோம். எனவே, என்னைப் பொறுத்தவரையில் ஹிந்தி அவசியமானது. அரசியல் நோக்கத்திற்காக மொழி பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் அரசியல் கட்சிகளோ, சிலரோ மொழி விவகாரத்தை ஒரு பிரச்னையாக உருவாக்குகிறார்கள்.நான் பள்ளியில் பயிலும் போது, ஹிந்தி எங்களுக்கு 2வது மொழி பாடமாகும். எனவே, ஹிந்தியை என்னால் பேசவும், எழுதவும் முடியும். ஏனெனில், நான் அதனை படித்துள்ளேன். ஆனால், தற்போது, ஏன் இந்த விவகாரம் இவ்வளவு பெரிய பிரச்னையானது என தெரியவில்லை. சத்தீஸ்கர், ஒடிசா, போன்ற ஹிந்தி தொடர்பு மாநிலங்களுடன் எல்லை பகிரும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கூட ஹிந்தி ஏன் இப்போது ஒரு பெரிய பிரச்னையாக மாறிவிட்டது என தெரியவில்லை. தெலங்கானாவில் உருது மற்றும் தெலுங்கு கலந்து பேசப்படுகிறது. மக்கள் மருத்துவமனைக்கு பதிலாக 'தவாகானா' என்று தான் சொல்கிறார்கள். இதில் தவறு என்ன?தெலங்கானாவில் உள்ள சில அரசியல் தலைவர்கள், ஹிந்தியை அரசியலாக்குகின்றனர். பாஜ மற்றும் மோடி மீதான எதிர்ப்பை ஹிந்தி மீது திருப்புகின்றனர். அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். ஆங்கிலம் போலவே ஹிந்தியும் இன்று அவசியமாகிவிட்டது. ஆனால் கட்டாயப்படுத்தாமல், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்க வேண்டும். பல்மொழி அணுகுமுறை தேவை.சென்னையில் வளர்ந்ததால், நான் தமிழை விரும்புகிறேன். கர்நாடகா போனால் கன்னடம் பேச முயற்சிக்கிறேன். இதுதான் தேசிய ஒற்றுமைக்கு தேவையான அணுகுமுறை. பாரதியைப் போல, மொழி ஒருங்கிணைப்புக்கான கருவியாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கட்டாயப்படுத்தினால் எதிர்ப்பு தோன்றும். ஹிந்தியின் தேவையை நியாயமாக விளக்கினால் மக்கள் ஏற்க முன்வருவார்கள், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராஜா
ஜூலை 24, 2025 15:06

சீதா அம்மா போஸ்ட் காலியாக இருக்கு அந்த பதவிக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் போல..வாழ்த்துக்கள்,


அப்பாவி
ஜூலை 24, 2025 13:13

இவரே பத்தாங்கிளாஸ் தாண்டலை. உயர் கல்வி அமைச்சரா போகலாம்.


pmsamy
ஜூலை 24, 2025 11:41

பவன் கல்யாண் பிறந்த மண்ணிற்கு துரோகம் செய்கிறார்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 24, 2025 07:16

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை வேண்டுமா திருப்பதி வேண்டுமா என்றதற்கு கருணாநிதி தான் எங்களுக்கு சென்னை போதும் திருப்பதி எல்லாம் வேண்டாம் என்று சொல்லி சென்னையை தமிழகத்தோடு இணைத்து கொண்டு திருப்பதி அது சார்ந்த பகுதிகளை ஆந்திரவிற்கு கொடுத்தார். தயவுசெய்து தெலுங்கு மொழி பேசுவோரை இகழ்ந்து பேச வேண்டாம். தமிழகத்தில் விவசாயம் தொழில் வளர்ச்சி பெருக காரணமே தெலுங்கு மொழி தாய் மொழியாகக் கொண்டு ஐநூறு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆந்திரா கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் தான். அவர்கள் எல்லோரும் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்படாத போது வந்தவர்கள். கர்நாடக கேரளா ஆந்திரா தெலுங்கானா தமிழகம் இவைகள் அனைத்தும் இணைந்து ஒரே மாகாணமாக இருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு செய்த மன்னிக்க முடியாத தவறே இந்த மொழி வாரி மாநிலங்கள் பிரித்தது தான். சர்தார் வல்லபாய் பட்டேல் அன்றே இது போன்ற நதி நீர் பிரச்சினை மொழி பிரச்சினை இன வேறுபாடு போன்றவைகள் வரும் எனக் கூறி மொழி வாரி மாநிலங்கள் பிரிக்க வேண்டாம் என கூறினார். ஆனால் ஜவஹர்லால் நேரு Divide and Rule. பாலிசி காரணமாக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதாவது இந்தியர்களை அடிமைகளாக வைத்திருக்க பிரிட்டிஷார் எந்த கொள்கையை பின்பற்றி வந்தார்களோ அதே கொள்கையின் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு மொழி வாரி மாநிலங்கள் பிரித்தார். எல்லோரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் தமிழகத்தில் தெலுங்கர்கள் கன்னியர்கள் எப்படி இங்கு இருக்கிறார்களோ அதே போல் தமிழர்களும் பலர் வட மாநிலங்களில் வசிக்கிறார்கள். கோவை போன்ற பாசன வசதி இல்லாத வறண்ட பூமியில் கிணறு தோண்டி கிணற்று பாசனத்தில் விவசாயம் செய்து அது சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வளம் மிக்க நிலப்பரப்பாக மாற்றியது தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களும் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை தொழில் கல்வி மற்றும் வாழ்க்கை முறையை உயர்த்தும். பொறாமை மனப்பான்மை அனைத்தையும் அழித்து விடும்.


Appan
ஜூலை 24, 2025 09:17

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களும் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். ....கவுண்டர்கள் தமிழை தாய் மொழியை கொண்டவர்கள். நாயுடுகள் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்கள் விஜயநகர ஆட்சியில் தமிழகத்தில் ஆட்சி செய்ய வந்தவர்கள. இதே போல் கண்ணாடியார்கள்..வாகலியர்கள் ஹோசைலா ஆட்சிக்காலத்தில் ஆட்சி செய்ய வந்தவர்கள். இந்த ரெண்டு சமூகங்களும் ஆண்ட பரம்பரை .அதனால் ஆற்று படுக்கை இளங்கலை இவர் வைத்து இருப்பார்கள். அதிகாரம், செல்வம் உள்ளவர்கள். தமிழர்கள் ...?


Appan
ஜூலை 24, 2025 07:14

இந்தியாவில் மொழிக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தெலுங்கர்கள். தெலுங்கர் பொட்டு சீனிவாசர் தியாகத்தால் இந்தியா மொழிவாரியாக பிரிக்கப்பட்டது. அந்த தியாகத்தை இந்த சினிமா நடிகன் கொச்சை படுத்திக்கிறார். அதோடு ஆந்திராகிவின் சி.எம் சந்திரபாபு நாயுடு பிஜேபியின் காலில் விழுந்து அதிகாரம் வேண்டும் என்று கொள்கைகளை காற்றில் விட்டு இந்தியை பிரதானம் என்று பாடுகிறார். இவர்கள் இருவரும் தெலுங்கை அழித்து விடுவார்கள்.


Easwar Kamal
ஜூலை 24, 2025 00:31

திருவண்ணாமலையில் உங்கள் தெலுங்கு கூட்டம் செய்கின்ற அட்டோல்யங்கள் சமூகவலய தலத்தில் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். அது சரி திருவண்ணாமலையில் உங்களுக்கு என்ன வேலை அதுதான் தமிழகத்துக்கு வர வேண்டிய காளகஸ்தி காங்கிரஸ் கட்சி வளைத்து போட்டு அந்த காலத்தில் எடுத்துகிட்டு போயாச்சு. இன்னமும் அடங்க வில்லை வெறி. அதுதான் தமிழக்த்தில் ஒரு பிள்ளைப்பூச்சி ஆட்சி நடத்துது காசு தூக்கி போட்ட vallai ஆட்டிகிட்டு போயிரும்னு நினைப்பு. ஜெய இருந்த காலத்துல எவனாவது இப்படி பேசிகிட்டு தெலுங்குல போர்டு வச்சிக்கிட்டு இருந்தானுங்கள ? பண்ணி இருந்தால் என்ன நடந்து இருக்கும்னு நன் சொல்லி தெரிய வேண்டாம் இதுல ஹிந்தி மொழிக்கு வேற வக்காலத்து.


Padmasridharan
ஜூலை 23, 2025 23:34

மொழியைப் பற்றி பேசுபவர்கள் யாராக இருந்தாலும் வாய் திறந்து பேசக்கூடியவர்களும் காது கொடுத்து கேட்பவர்களும் ஆவர். இவர்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகளின் speech impaired மொழியை sign language for hearing impaired மறந்து பேசுகிறார்கள். அம்மொழியை கல்விக்கூடங்களில் include செய்வார்களா சாமி


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 23:01

தேசிய ஒற்றுமைக்கு ஒரு இந்திய மொழி அனைவரும் பேசவேண்டும். அனைவரும் தமிழ் பேசமுடியாது. அதனால் அனைவரும் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம். ஹிந்தி கற்றால் தான் மத்திய அரசு வேலை கிடைக்கும். அதே போல் எடப்பாடி முதல்வர் ஆனவுடன், தமிழக அரசு வேலைக்கும் ஹிந்தி மொழி அவசியம் என்ற கட்டுப்பாடு வரும். காரணம் தமிழகத்தில் மூன்று கோடி வடஇந்தியர்கள் வேலை செய்து தமிழகத்தை உயர்த்துக்கிறார்கள் . ஹிந்தி மொழி தெரியாமல் அதிகாரிகள் எப்படி வடஇந்தியர்களிடம் கருத்துப்பரிமாற்றம் செய்ய முடியும்? தமிழகத்தில் வாழ்வதற்கு ஹிந்தி மொழி அவசியமல்ல. ஆனால் தமிழக அரசு வேலை செய்வதற்கு ஹிந்தி அவசியம். அதற்காக தான் எடப்பாடி முதல்வர் ஆனவுடன், ஏழை எளியவர்களுக்கு விரைவில் ஹிந்தி கற்றுக்கொடுக்கப்படும்.


Amruta Putran
ஜூலை 23, 2025 22:53

But why there is no oppose for government run Urdu schools?


Raja k
ஜூலை 23, 2025 22:23

இந்தி அவசியம் அல்லது அவசியம் இல்லையானு அவர்ரவர் முடிவு பன்னி கொள்வார்கள், இந்தி அவசியம் என்று ஊருக்கு சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை,


Srinivasan Krishnamoorthy
ஜூலை 23, 2025 23:53

Why, only karunanidhi family has to say if Tamil people to learn 3rd language or not, who gave them powers to represent all, DMK does not represent tamilnadu.


புதிய வீடியோ