உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை: கொந்தளிக்கிறார் ராகுல்

ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை: கொந்தளிக்கிறார் ராகுல்

புதுடில்லி: 'ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலத்தில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தை போலவே, இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் 3 நாட்களாக நின்று கொண்டிருந்துள்ளது. இது குறித்து 3 நாட்களாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராகுல் கண்டனம்

இந்நிலையில், சமூகவலைதளத்தில், ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசா பாலாசூர் பயங்கர விபத்தை பிரதிபலிக்கிறது. பயணிகள் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது. ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகியிருந்தாலும், மத்திய அரசு பாடம் கற்கவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும். இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

kumarkv
அக் 17, 2024 15:54

நீ என்ன கத்து கொண்டாய்


Rasheel
அக் 17, 2024 11:42

சதிகாரர்களை பின்னால் மறைந்து இருப்பது சதியை விட மிக கேவலமானது.


Indian-இந்தியன்
அக் 17, 2024 10:43

டேய் நீ தானே இதுக்கெல்லாம் காரணம்.


V RAMASWAMY
அக் 16, 2024 14:06

அப்படியானால் பாடம் புகட்டிக்கொண்டிருப்பவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும், சரியா?


karthik
அக் 15, 2024 08:54

நீ எதற்க்காக ரயில் என்ஜின் ஓட்டுனர்களை திடீரென்று சிலமாதங்கள் முன்பு சந்தித்தாய் என்று பெரும் சந்தேகம் எழுகிறது. நீ பாரதத்திற்கு ஒரு விஷமாய் விஷச்செடியாய் வளர்ந்து நிற்கிறாய்.


Durai Raj
அக் 14, 2024 21:49

குறைசொல்ல எண்ண இருக்கு


Durai Raj
அக் 14, 2024 21:38

வேலை செய்பவர்களின் வேலைகவன குறைபாடாக இருக்கலாம் இதில் மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எண்ண இருக்கிறது


Durai Raj
அக் 14, 2024 21:23

நம் நாட்டில் குற்றம் செய்பவனுக்கு தான் அதிகாரம், அரசியல் பின்புலம் சட்டமும் இருக்கிறது.தவறதலாக சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது


Dharmavaan
அக் 14, 2024 07:45

பிஜேபி ஏன் மௌனமாக இருக்கிறது திருப்பி கொடுக்காமல் அதுவே இவனுக்கு திமிர் கங்கண,ஸ்ம்ருதி இராணி போன்றவர்களை சுதந்திரமாக விட வேண்டும்.விட்டால் இவன் வாய் திறக்க மாட்டான் பிஜேபி தவறு செய்கிறது


Mohan
அக் 13, 2024 20:37

எல்லோரும் பாஜகவை,மத்திய அரசை குறை கூறுகி றீர்களே ஏன் யாரும் டிரெயினை ஒட்டும் டிரைவர்மீது ஒன்றும் சொல்வதில்லை?. கவரப்பேட்டை ஸடேஷன் மெயின் லைனில் இல்லாமல் லூப் லைனில் வண்டிக்கு சிக்னல கிடைத்தால், சுதாரிச்சு ஸ்லோவாக சென்றிருக்கலாமே ஏன் செய்யவில்லை இதை யாரும் ஏன் கேட்கவில்லை?? அதிலும் விடியல் சொந்தக்காரர் யாராவது தான்இருந்தாரா? மனது சுத்தத்துடன், முன்அனுபவம் உள்ளவர்தான் இஞ்சினை ஓட்டினாரா?? ரெயில்வே போர்டு மெம்பர்களாக உள்ளவர்கள் அரசியல் ஜால்ரா தவிர எந்த வகை அனுபவமும் திறமையும் படைத்தவர்களாக இல்லாமல் இருப்பதுதான் அத்தனைக்கும் காரணம் என பேச்சு அடிபடுகிறது. இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. ஆனால் அந்த மாதிரி நபர்கள் ரயில்வேயில் செயல்பட போர்டு மெம்பர்கள் அனுமதிப்பதில்லை. விநாச காலே விபரீத புத்தி .