உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்: ஜெய்சங்கர்!

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்: ஜெய்சங்கர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது நிலவரப்படி அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்கா தேர்தல் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கடந்த காலமாக, அமெரிக்காவுடனான எங்கள் உறவில் நிலையான முன்னேற்றம் கண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும். அமெரிக்கத் தேர்தலைப் பார்க்கும்போது, ​​தீர்ப்பு எதுவாக இருந்தாலும், எங்கள் உறவு தொடர்ந்து வளரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். டிரம்ப் அதிபராக இருந்த போது, உறவுகள் புத்துயிர் பெற்றது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KavikumarRam
நவ 06, 2024 12:31

தல நீங்களும் மோடியும் இருக்கிறவரைக்கும், உலகத்துல எந்த நாட்டுல, யாரு ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலையே கிடையாது. உங்களோட செயல்பாடுகள் அந்தளவுக்கு மிகச்சிறப்பாக இருக்கின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இன்றுவரைக்கும் பாரதம் கண்டிராத பொக்கிஷம் நீங்கள்.


Ramesh Sargam
நவ 06, 2024 11:36

ட்ரம்பின் வெற்றி அமெரிக்கர்களுக்கு கொண்டாட்டம். இந்தியர்கள் மற்றும் வேறு பல நாட்டவர்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம். எப்படியோ, ட்ரம்ப் முதலில் செய்யவேண்டியது அங்கு தினம் தினம் நடக்கும் துப்பாக்கி சூடு தீபாவளிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களை, குறிப்பாக மாணவர்களை அப்படிப்பட்ட துப்பாக்கி சூட்டிலிருந்து காப்பாற்றவேண்டும். துப்பாக்கி விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும். துப்பாக்கி சூடு தீபாவளிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நம் இந்திய முறை தீபாவளியை கொண்டாட வேண்டும்.


MARI KUMAR
நவ 06, 2024 11:19

இந்தியா அமெரிக்கா உறவுகள் வளர்ச்சி அடைந்தால் நல்லது தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை